By Village Missionary Movement
Monday, 22-May-2023இன்றைய தியானம்(Tamil) 22-05.2023
விருந்தோம்பல்
"முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்" - 1 பேதுரு 4:9
விருந்தோம்பல்-விருந்தினரை உபசரித்தல், இது ஒரு மெய்யான கிறிஸ்தவனுக்கு அடையாளமாக இருக்கிறது. கிறிஸ்தவ அன்பைப் பிறருக்கு வெளிப்படுத்தி காட்டுவதற்கு விருந்தோம்பல் ஒரு சிறந்த வழியாகும். லாசரு, மரியாள், மார்த்தாள் மூவரும் விருந்தோம்பலில் சிறந்து விளங்கினார்கள். அவர்களுடைய இல்லத்தில் இயேசு கிறிஸ்து தங்க விருப்பம் கொண்டிருந்தார். ஒவ்வொரு கிறிஸ்தவ இல்லமும் அதுபோன்று திகழ முடியும். கர்த்தருடைய நாமத்தின் மகிமைக்காக நாம் ஒருவரை உபசரிப்போமாயின் அது கர்த்தரையே உபசரிப்பதாக கருதப்படும். இந்த விருந்தோம்பல் குறித்ததான சில நடைமுறை ஆலோசனைகளைக் காண்போமா?
1. கர்த்தரை நாம் எவ்வாறு உபசரிப்போமோ, அவ்வாறே நமது விருந்தினர்கள் அனைவரையும் உபசரிக்க வேண்டும். அதுவே தகுதியான நடத்துதலாகும்.
2. நமது விருந்தோம்பல் சுற்றத்தாருக்கும், நண்பர்களுக்குமே உரியதாக இருக்கக்கூடாது. ஏழையையும், ஊனரையும், சப்பாணியையும் அழைக்க வேண்டும்.
3. விருந்தினர்கள் சென்றபின் அவர்களைக் குறித்து இழிவாக பேசாதிருப்பதே நற்பண்பு. அவர்களுடைய நடக்கை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அவர்களைப் பற்றி இழிவாய்ப் பேசுவதை தவிர்ப்போம்.
4. விருந்தோம்பல் செலவுமிக்கது, நமது மற்ற வேலைகளைக் கெடுத்துவிடும் என்பது உண்மையாயினும், எல்லாவற்றிலும் மிகவும் முதன்மையான ஊழியமாக இதைக் கருத வேண்டும்.
5. செலவு மிகுந்த விருந்தை ஆயத்தம் செய்ய வேண்டுமென்பது தேவையற்றது. ஆடம்பரமான உணவு வகைகளைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. எளிய உணவாயினும் மனமகிழ்ச்சியோடு பரிமாறுவதே மேலானதாகும்.
6. நமது விருந்தோம்பலின் நோக்கம் சுய பெருமையை வெளிக்காட்டுவதாய் அமைந்து விடக்கூடாது. பெயர், புகழுக்காக இதைச் செய்யாமல் கிறிஸ்துவின் அன்பின் நிறைவினால் இதை செய்ய வேண்டும்.
பிரியமானவர்களே! உங்கள் சபைக்கு புதிதாக வந்திருக்கும் குடும்பத்தாரை அன்புடன் விசாரித்து அன்று உங்கள் இல்லத்தில் உணவருந்த அழையுங்கள். நமக்கு அன்று வேறு வேலையிருப்பினும் அதனை ஒதுக்கி வைத்துவிட்டு இப்படி அன்பு பாராட்டுவது அக்குடும்பத்தாரை மகிழ்ச்சியூட்டுவதாக இருக்கும். முதல் முறை அவர்கள் பெறும் உபசரிப்பினாலேயே பலர் சபைக்கு தொடந்து வந்து உறுப்பினர்களாக மாறுவர். நாம் இப்படி ஏதாவதொன்றை கிறிஸ்துவின் சபைக்காக செய்ய வேண்டாமா?
- Mrs. வில்லியம் மெக்டொனால்டு
ஜெபக்குறிப்பு:
பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் ஊழியங்கள் மூலம் சந்திக்கப்படும் மாணவர்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864