Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 21-05.2023 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Saturday, 20-May-2023

இன்றைய தியானம்(Tamil) 21-05.2023 (Kids Special)

 

உண்மையான Friend  

 

“சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்" – நீதிமொழிகள் 27:6

 

சம்மர் லீவ் விட்டாச்சு, ரொம்ப ஜாலியாக இருக்கீங்களா? வெயில் அதிகமாக இருக்கிறதுனால ஊர் சுற்றக்கூடாது, நல்லா தண்ணீர் குடிக்கணும், பெற்றோர் சொல்வது கேட்கணும் சரியா! உங்களுக்கு நண்பர்கள் இருக்கிறாங்க இல்லையா, அதிலும் Close friend இருப்பாங்க தானே, உங்க கூட பழகுகிறவங்க நல்ல நண்பர்களா என்று பார்த்து பழக வேண்டும். அதைப்பற்றி தான் இன்றைக்கு கதை கேட்கப் போகிறோம். கேட்கலாமா? 

 

ஒரு காட்டில் கழுதையும், புலியும் நண்பர்களாக இருந்தார்களாம். என்னடா, இரண்டு பேரும் சேர்ந்து நண்பர்களா இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று தானே நினைக்கிறீங்க, சரி வாங்க இவங்க ரெண்டு பேரும் என்ன பேசிக்கிட்டாங்கன்னு கேட்கலாமா? புலியைப் பார்த்து கழுதை சொன்னதாம், அந்த புல் எவ்வளவு அழகாக உள்ளது. ஊதா கலர்ல இருக்கிறது பார்த்தியா? என்று சொல்ல, புல் பச்ச கலர்ல தான இருக்கும் அது பச்சை கலர் தானே என்று சொன்னதாம் புலி. இப்படி மாறி மாறி ஊதா கலர் தான், இல்லை பச்சை கலர் தான் என்று வாக்குவாதம் நடந்ததாம். திடீரென்று அந்த நேரத்தில் சிங்கராஜா வந்தது. என்ன பிரச்சனை என்று கேட்டது. நடந்த விஷயத்தை சொன்னதும், சிங்க ராஜா யோசித்து விட்டு, புலிக்கு ஒரு வாரம் சாப்பாடு கிடையாது என்று தண்டனை விதித்தது. என்ன ராஜா புல் பச்சை கலர்ல தானே இருக்குது சரியாதானே சொன்னேன் என்றது புலி. நீ சொன்னதற்காக உனக்குத் தண்டனை இல்லை. காட்டுக்கு மந்திரியான நீ, கழுதை கூட friendship வச்சிருக்க. நீ உண்மையை சொன்னா கூட ஏற்றுக் கொள்ள முடியாத friend எல்லாம ஒரு friend - ஆ? உன்னோட பெரிய பொறுப்பை உணராமல் Silly Matter - க்கு போய் கழுதை கூட சண்டை போட்டு கொண்டு இருக்கிற பாரு அதுக்காகத்தான் உனக்கு தண்டனை என்றது.

  

நல்ல friend எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்து கொண்டீர்களா? உங்க வாழ்க்கையிலும் நல்ல நண்பர்கள் கிடைக்க prayer பண்ணனும் தவறான காரியங்கள் செய்தால் அதை திருத்துவது தான் நல்ல friend- க்கு அடையாளம். So, நீங்களும் நல்ல பிள்ளைகளாய் இருக்கணும், உங்கள் பிரண்ட்ஸையும் நல்ல வழியில நடத்தணும். ஓகே வா குட்டீஸ்?

- Mrs. தெபொராள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al