By Village Missionary Movement
Saturday, 20-May-2023இன்றைய தியானம்(Tamil) 20-05.2023
நானே காரணம்
“நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்” - மத்தேயு 7:1
மரம் வெட்டும் ஒருவர், ஒரு போதகருடைய இல்லத்தில் உள்ள மரத்தை வெட்ட அழைக்கப்பட்டிருந்தார். மரம் வெட்டும் போது அவரது நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தியது. அதைத் துடைத்துக் கொண்டே "எல்லாம் ஆதாம் செய்த பாவத்தால் வந்தது. ஆதாமின் கீழ்ப்படியாமையால் தானே எனக்கு இந்த நிலை. அதனால் தான் நானும் சாபத்துக்குள்ளாக கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டியதாய் இருக்கிறது" என்று புலம்பிக்கொண்டே வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இதைக் கூர்ந்து கவனித்த போதகர் இவருக்கு உண்மையை நிரூபிக்க எண்ணினார்.
சாயங்காலமான போது மரவெட்டி போதகரிடம் கூலியைப் பெற வந்தார். போதகர் கூலியோடு ஒரு பொட்டலத்தையும் கொடுத்து இதை பத்திரமாக வைத்திரு. நாளைக்கு வேலைக்கு வரும்போது இதைக் கொண்டு வா நான் உனக்கு 100 ரூபாய் தருகிறேன் என்றார். மரவெட்டி அதை வாங்கிக் கொண்டு நடந்தான். இந்த பொட்டலத்தை பத்திரமாக வைத்திருப்பதற்கு 100 ரூபாய் என்றால் இதற்குள் எவ்வளவு விலை உயர்ந்த பொருள் இருக்கும் என எண்ணி அதைத் திறந்தான். அப்பொட்டலத்தில் இருந்து ஒரு எலி தாவிக்குதித்து காட்டுக்குள் ஓடி மறைந்தது . மறுநாள் போதகரிடம் விஷயத்தை கூறினான். போதகர் சொன்னார், “நேற்று எல்லாம் ஆதாமின் கீழ்ப்படியாமையாலே கஷ்டப்படுவதாய் புலம்பினாயே, நீ இப்பொழுது கீழ்ப்படிந்து உள்ளாயா” என்றார். சிலர் தேவன் ஏன் ஏதேன் தோட்டத்தில் நடுவே நன்மை தீமை அறியத்தக்க மரத்தை வைக்க வேண்டும்? வைக்காதிருந்தால் ஏவாள் பாவம் செய்திருக்கமாட்டாளே! என்பர்.
மனிதனுடைய அடிப்படை பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று தனது தவறுக்கு பிறர் மேல் பழி போடுவது! அன்று தான் செய்த தவறுக்கு ஏவாளை குற்றம் சுமத்தினான் ஆதாம். ஏவாளோ சர்ப்பத்தை கை காட்டினாள். இன்றும் கூட நாம் அப்படித்தான் நடந்து கொள்கிறோம். தங்களின் தவறுக்கு பிள்ளைகள் பெற்றோரையும், பெற்றோர் பிள்ளைகளையும் குற்றம் சுமத்துகிறார்கள். சிலர் தாங்கள் செய்த தவறுக்கு சமுதாயத்தின் மேலும் அரசாங்கத்தின் மேலும் குற்றம் சுமத்துகின்றனர். ஆனால் நியாயத்தீர்ப்பு நாளில் தேவனுக்கு முன்பாக நிற்கும் போது நமது குற்றத்திற்கு காரணராக யாரையும் கை காட்ட முடியாது. ஆகவே பிரியமானவர்களே, நமது குற்றத்தை பிறர் மேல் சுமத்தித் தப்பித்துக்கொள்ள எண்ணாமல், நமது குற்றத்தை நாம் ஒப்புக்கொண்டு தேவனிடம் மன்னிப்பு கேட்டால் நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்து பயப்பட அவசியமில்லை
- Mrs. ஜோதி ஆனந்த்
ஜெபக்குறிப்பு:
பைபிள் காலேஜ் மாணவர்கள் தங்கும் விடுதியின் கட்டுமான பணிக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864