Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 11-05.2023
Share:

By Village Missionary Movement

Thursday, 11-May-2023

இன்றைய தியானம்(Tamil) 11-05.2023

 

கல்வாரி அன்பு 

 

“மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும் அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.” -1 கொரிந்தியர் 13: 2 

 

அன்பின் பாதையில் நடந்து செல்வதென்பது ஒருபோதும் ஒர் எளிய வழி அல்ல! அவ்வன்பின் வழி செல்ல மனப்பூர்வமாய் தீர்மானித்தவர்களாய் இருந்தால் பாடுபடுவதற்கும் ஆயத்தமாயிருக்க வேண்டும். இந்த அன்பின் ஜீவியத்தில் வெற்றியாய் வாழ வேண்டுமானால் அதற்கு தெய்வீக அன்பைக் காட்டிலும் வலிமையான வேறொன்றுமில்லை. இப்படிப்பட்ட கல்வாரி அன்பு நம்மிடம் உண்டோ என்று நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போம். 

 

• தித்திப்பான தண்ணீர் நிறைந்த டம்ளரை எவ்வளவு மோசமாக அசைத்தாலும் அதிலிருந்து சிந்தும் தண்ணீரில் ஒரு துளி கூட கசப்பாய் மாறுவதில்லை. அவ்வாறிருக்க, என்னைத் திடீரென்று குலுங்கச் செய்யும் ஒரு சம்பவம் நான் பொறுமையற்ற அன்பில்லாத வார்த்தைகளைப் பேசச் செய்தால், என்னில் கல்வாரிஅன்பு இல்லையென்றுதானே அர்த்தம்! 

 

• பரந்த இந்த உலகில் உள்ள எல்லா கடற்கரை மணலையும் ஒரு நாளில் பலமுறை அலையினால் கழுவிட தேவன் வல்லமை பொருந்தினவராய் இருக்க, பிறருடைய குற்றத்தின் ஞாபகங்களை என் மனதிலிருந்து அவரால் அகற்றிட முடியும் என்பதை உணராமல், "நான் எனக்கு விரோதமாய் குற்றம் செய்தவனை மன்னித்து விடுகிறேன். ஆனால் அதை மறக்க என்னால் முடியாது" என்று கூறுவோமானால் என்னில் கல்வாரிஅன்பு இல்லையென்றுதானே அர்த்தம்! 

 

• பரந்த இப்பாரில் தாழ்மையின் சிகரமாம் கல்வாரி சிலுவை மர அடிவாரத்தின் புழுதி ஒன்றே அல்லாமல் எனக்கென்று வேறு ஸ்தானத்தை நான் இச்சிப்பவனாக இருந்தால் என்னில் கல்வாரிஅன்பு இல்லையென்றுதானேஅர்த்தம்!  

 

இந்த அன்பின் ஜீவியத்தை அனுபவிக்கும்படி தீராத வாஞ்சை கொண்டவர்கள் மாத்திரமே பரிசுத்த ஆவியானவர் தங்களை நிறைத்துவிடும்படியாய் எப்பொழுதும் தங்கள் இருதயத்தைக் கழுவி சுத்திகரித்துக் கொள்ள ஜாக்கிரதையாய் இருக்கிறார்கள். தேவனும் இவர்களின் இதய கூக்குரலை கேட்டு அவர்களை மீண்டும் மீண்டுமாய் தம் அன்பினால் நிறைத்துக் கொண்டேயிருக்கிறார். இப்படிப்பட்ட அன்பின் தாகம் உங்களுக்குண்டா?

- ஏமி கார்மைக்கேல் அம்மையார் 

 

ஜெபக்குறிப்பு:

ஆமென் வில்லேஜ் டிவிக்கு மீடியா பிரிவில் பணிபுரியும் நபர்கள் பெசலெயேலின் ஞானத்தினால் நிரப்பப்படஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al holiganbet giriş holiganbet padişahbet bets10 extrabet royalbet süperbetin padişahbet betcio romabet giriş romabet queenbet bahiscasino betcio bahiscasino atlasbet matbet matbet giriş bahiscasino celtabet queenbet casibom jojobet