Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 07-05.2023 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 07-May-2023

இன்றைய தியானம்(Tamil) 07-05.2023 (Kids Special)

 

VBS வந்தாச்சு 

 

“ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்“ - நீதிமொழிகள் 11:30

  

ஹலோ குட்டீஸ் எப்படி இருக்கிறீங்க? Summer லீவு விட்டாச்சு, ஒரே ஜாலிதான், அப்படித்தானே! மே மாதம் வெயில் பயங்கரமா இருக்கும், வெயில்ல ஊர் சுத்தக் கூடாது, தண்ணீர் நிறைய குடிக்கணும், அப்பா, அம்மா வார்த்தைக்கு கீழ்ப்படியணும், ஓகே வா? மே மாதம் வந்தவுடன் உங்களுக்கு என்ன ஞாபகம் வருது? Super. Correct -டா சொன்னீங்க. ஆமா VBS -னா புது பாடல், வசனம், puppet, கதை எல்லாம் கேட்கலாம். Okay. நீங்க கட்டாயம் உங்க ஊர்ல நடக்கிற VBS க்கு போகணும் சரியா? இப்போ ஒரு கதை கேக்கலாமா? 

  

ரமேஷ் காலையிலே சீக்கிரமாக எழுந்து, குளித்து கிளம்பி, அம்மா கிட்டபோய், "அம்மா சாப்பாடு கொடுங்க, நேரமாச்சு" என்றான். அம்மாவுக்கு ஒன்னும் புரியல. "என்ன ஆச்சு உனக்கு. இவ்வளவு சீக்கிரமா கிளம்பி எங்க போற, அதான் உனக்கு ஸ்கூல் லீவ் விட்டாங்களே" என்றார்கள். ரமேஷ் சிரித்துக் கொண்டே "ஐயோ அம்மா! இது என்ன மாதம் தெரியுமா?" என்றான். உடனே அம்மா "இது மே மாதம்" என்று இழுத்துக் கொண்டே "ஓ, VBS போறீயா? ஆமா 9 மணிக்கு தானே ஆரம்பிப்பாங்க, நீ ஏன் இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டே?" என்றார்கள். உடனே ரமேஷ் அம்மாவிடம், அம்மா போன வருடம் VBS சொல்லிக் கொடுக்க வந்த அந்த அண்ணன்மார்கள், அடுத்த வருடம் VBS க்கு வரும்போது புதுசா இரண்டு பேரையாவது கூட்டிட்டு வாங்கன்னு சொன்னாங்க. அதான் நம்ம ஊருக்கு புதுசா குடி வந்திருக்காங்களே அந்த கோபி uncle அவங்க பிள்ளைகளையும், அவங்க வீட்டிற்கு Guest -அ வந்து இருக்கிற அந்த பிள்ளைகளையும் கூப்பிட்டு போறேன். நாம தெரிஞ்சுக்கிட்ட இயேசப்பாவை மத்தவங்களுக்கும் காட்ட வேண்டாமா? அதான் இவ்வளவு சீக்கிரமாக போறேன்” என்று சொன்னான். அம்மாவும் சந்தோஷமாக அனுப்பி வச்சாங்க. 

 

குட்டி தம்பி, தங்கச்சி! நீயும் ரமேஷ் போல உங்க வீட்டிற்கு மற்றும் உங்க பக்கத்து வீட்டிற்கு Guest -டா வந்திருக்கிற பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு இந்த வருடம் VBS க்கு போயிடுங்க. இது உங்களோட கடமை என்று கூட சொல்லலாம். அதோடு கிறிஸ்தவரல்லாத உன் Friends - ஐயும் கூட்டிச் செல். நீ VBS -க்கு கூட்டிக்கொண்டு போகும் அவர்கள் கட்டாயம் பரலோகத்திற்கு உன்னுடன் வருவார்கள்.

- Mrs .சாராள் சுபாஷ்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al