Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 05-05.2023
Share:

By Village Missionary Movement

Friday, 05-May-2023

இன்றைய தியானம்(Tamil) 05-05.2023

 

3A முறை 

 

“புருஷன்... தன் மனைவியோடே இசைந்திருப்பான். அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்” - ஆதியாகமம் 2:24

 

குடும்பம் என்பது ஆதியிலே தேவன் மனிதனுக்குக் கொடுத்த ஒரு அற்புதமான அமைப்பு. இதில் கணவன்-மனைவி உறவு என்பது தேவனே நியமித்த ஒன்று. இன்று பெற்றோரால் நடத்தப்படுகின்ற திருமணங்களில் கூட ஒரு சில விவாகரத்தில் முடிகின்றன. இதற்கு அநேக காரணங்கள் இருப்பினும் முதன்மையாக உள்ளது ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாததே ஆகும். இன்றும் கணவன்-மனைவி உறவு பலப்பட, "A" ல் ஆரம்பிக்கும் 3 வார்த்தைகளின் கருத்தைக் காண்போம்.

 

1. Accept - ஏற்றுக்கொள்: முதலாவதாக உங்கள் வாழ்க்கைத் துணையை உள்ளபடியே ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்(ள்) அந்த நபர் போல இல்லையே என்று எவருடனும் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் குறைவுகள் உண்டு. குறையில்லாத கணவன்-மனைவி என்று யாருமே கிடையாது. உங்கள் துணைவர் ஒரு சிறு தவறும் செய்யக்கூடாது என்று எதிர்பார்ப்பீர்களானால் அதிருப்தியே அடைவீர்கள். எதிர்பார்ப்புகளை விட்டு விட்டு நான் சிறப்பான துணையாக இருக்கும்படி முயற்சி செய்வேன் என தீர்மானம் எடுங்கள்.

 

2. Adjust - ஏற்றவாறு உன்னை மாற்றிக்கொள்: உங்கள் வாழ்க்கைத் துணையின் பழக்க வழக்கங்கள் உங்கள் விருப்பப்படி மாற வேண்டுமென்று அவர்(ள்) மேல் ஆலோசனைகளைத் திணிக்காமல், அவரது குணநலன்களுக்கு ஏற்றுவாறு உங்களை அட்ஜஸ்ட் பண்ண கற்றுக் கொள்ளுங்கள். அதுவே நல்ல குடும்ப உறவைக் கட்டி எழுப்பப் போடப்படும் உறுதியான அஸ்திபாரம்.

 

3. Appreciate - பாராட்டு: உணவு நன்றாய் இருக்கிறது என்று உங்கள் மனைவியிடம் கூறும்போது அடுத்தமுறை இன்னும் சுவையாக சமைக்க ஆசை கொள்வாள். உங்கள் கணவரின் கடின உழைப்பை பாராட்டும்போது அவர் இன்னும் மகிழ்ச்சியாக உழைக்க விருப்பமடைவார். அவரது செயலை நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என மனநிறைவும் அடைவார். இவ்வாறு ஒருவரையொருவர் பாராட்டுவதும் அன்பு கூருவதின் ஒரு பகுதியாகும். நீங்கள் உங்கள் பாராட்டைக் காண்பித்து, துணையை நேசிப்பீர்களென்றால் அவர்களில் பெரிய மாற்றத்தைக் காணலாம். குற்றம் கண்டுபிடித்தல், குறை சொல்லுதல் ஆகியவை உங்கள் துணையைத் திருத்தாது. ஆனால் பாராட்டுக்கள் நிச்சயம் ஒருவரை மாற்றும்.

 

மேற்கண்டவற்றை நீங்கள் படிப்படியாக செயல்படுத்தும்போது இருவரின் அன்பின் பிணைப்பும் பலப்படும். குடும்ப உறவும் வளமாகும்.

- Mrs. ஜெபா டேவிட்கணேசன்  

 

ஜெபக்குறிப்பு 

VVBS ஊழியங்கள் மூலம் சந்திக்கப்படும் சிறுவர்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al