Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 03-05.2023
Share:

By Village Missionary Movement

Wednesday, 03-May-2023

இன்றைய தியானம்(Tamil) 03-05.2023

 

உண்மையான சொத்து

 

“நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்கு போலச் சுத்தப்பொன்னாயிருந்தது” - வெளி. 21:21

 

சுரங்கத்தில் தங்கத்தைத் தோண்டியெடுத்து, அந்த தங்கக் கட்டிகளை தான் செல்லும் இடமெல்லாம் ஒரு தோள்பையில் சுமந்து கொண்டு சென்ற ஒரு சிறந்த தொழிலாளரின் கதை இது. ஒரு நாள் அவன் மரித்து பரலோகத்திற்குச் சென்றான். இன்னும் அந்த தங்கக் கட்டிகளை சுமந்து கொண்டேயிருந்தான். அதை விடுவதாயில்லை. பரலோகத்தை சுற்றிக் காட்டிய ஒரு தூதன், "உன் பைக்குள் என்ன வைத்திருக்கிறாய்? தூக்கிக் கொண்டே திரிகிறாயே" என்று கேட்டான். சுரங்கத் தொழிலாளி பையை திறந்து காட்டிவிட்டு கூறினான், “இது மிகவும் விலை உயர்ந்த தங்கம். இவை எல்லாவற்றையும் நானே சுரங்கத்திலிருந்து எடுத்தேன். எங்கேயாவது வைத்து விட்டால் தவறி விடும் என்பதற்காக என்னிடமே பத்திரமாய் வைத்துக்கொண்டிருக்கிறேன்" என்றான். தூதன் பலமாய் சிரித்து, "இது ரோடு போட பயன்படும் பொருள் அல்லவா? இதை நீ இவ்வளவு பத்திரமாய் வைத்திருப்பது பைத்தியக்காரத்தனமாய் இருக்கிறதே. நீ பூமியில் ரோட்டோரத்தில் கிடக்கும் ஒரு பெரிய கருங்கல்லை பையில் வைத்து பத்திரமாய் சுமந்து திரிந்தாயென்றால் தெரிந்தவர்கள் உன்னை பைத்தியக்காரன் என நினைக்க மாட்டார்களா? அதே போல் தோன்றுகிறது எனக்கு" என்றான். அதற்கு அவன், "இது ரோடு போடும் பொருளல்ல இது தங்கம்" என்று விளக்கிக் கூறினான். அதற்கு அந்த தூதன் "பூமியிலே இது தங்கம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இதை பரலோகத்திலே சாலைகள் அமைக்கும் கல்லாகத்தான் பயன்படுத்துவோம்", என்றான்.

 

இது ஒரு வேடிக்கையான கதை தான். ஆனால் பூமியில் மதிப்புமிக்கதாகக் கருதப்படுகிறவைகள் எல்லாம் பரலோகத்தில் குப்பை என எண்ணப்படுகிறது என்பதை நமக்கு உணர்த்துகிறதல்லவா? தங்கத்தை மிக உயர்ந்த மதிப்புள்ள உலோகமாக நாம் கருதுகின்றோம். அதை நமது மதிப்பு மிக்க உடைமைகளில் ஒன்றாக வைத்துக் கொள்கிறோம். ஆனால் பரலோகத்தில் நாம் நடந்து செல்வது அதன் மீது தான். எப்படி நேர்மாறாய் இருக்கிறது பார்த்தீர்களா? 

 

உலகத்தில் நாம் உயர்வாக மதிப்பீடு செய்பவை நாம் வாங்கும், சேர்த்து வைக்கும் அவசியமற்ற பொருட்கள், பதவிகள், வங்கிக் கணக்குகள், பெயர், புகழ் இவையெல்லாம் பரலோகத்தில் எள்ளளவும் மதிக்கப்படுவதில்லை. உலகத்துக்கு "குட்பை" சொல்லுகிற வேளை வருகிற போது, இவைகளுக்கெல்லாம் என்ன மதிப்பு இருக்கிறது? பூமியில் நம்முடைய உடைமைகள் எல்லாம் தற்காலிகமானவையே, நிரந்தரமானவையல்ல என்பது ஞாபகமிருக்கட்டும். நம்முடைய உண்மையான சொத்து பரலோகத்தில் தான் இருக்கிறது.

- Bro. வெர்னன்

 

ஜெபக்குறிப்பு:

இம்மாதம் முழுவதும் நடைபெறும் VVBS ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al