By Village Missionary Movement
Monday, 01-May-2023இன்றைய தியானம்(Tamil) 01-05.2023
மகத்துவமான சிறுவர் ஊழியம்
“இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும்…” - மாற்கு 11: 23
தகப்பனில்லாத ஒரு கிறிஸ்தவப் பெண்மணிக்கு 14,12 வயதில் இரு பையன்கள் இருந்தனர். தவறாமல் ஆலயம் சென்று ஓய்வுநாள் பள்ளி, VBS லும் பங்கு பெறுகிறவர்கள். சுகவீனமான தன் தாயுடன் மருத்துவமனை சென்றவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. முற்றிய நிலையிலுள்ள புற்றுநோயினால் அந்தப் பெண்மணி பாதிக்கப்பட்டவளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அவள் இன்னும் அதிகபட்சம் 6 மாதம் மட்டுமே உயிரோடு இருக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மிகுந்த கவலை, வேதனையோடு தன் நிலையை எண்ணி அழுது கொண்டேயிருந்தாள். மூத்தமகன் வேதாகமத்தை கொண்டு வந்து தாயின் அருகிலிருந்து மாற்கு 11:23ம் வசனத்தை வாசித்தான். "ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.” இந்த வார்த்தையின்படியே விசுவாசத்துடன் நாம் ஜெபிப்போம் அம்மா. நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள் என பிள்ளைகள் தைரியப்படுத்தினர்.
அந்தப் பெண்மணியும் தொடர்ந்து விசுவாசத்துடன் வார்த்தையை நம்பி ஜெபிக்க ஆரம்பித்தார். வேதத்தைச் சரியாக வாசிக்காமல், தியானிக்காமல் வாழ்ந்த அந்தப்பெண் அன்றிலிருநது தினமும் வேதம் வாசிக்க ஆரம்பித்தார். அடுத்தடுத்த வசனங்களையும் வாசிக்கத் தூண்டப்பட்டார். பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி பிறருடைய குறையை அவனுக்கு மன்னியுங்கள். இவ்வசனம் அவளோடு இடைபட ஆரம்பித்தது. அவளுடைய உறவினர்களை மன்னிக்க முடியாத தன்னுடைய மனநிலையை அவள் உணர்ந்து, மனங்கசந்து அழுது மன்றாடி எல்லோரையும் மன்னித்தாள். என்ன ஆச்சரியம்! அநேக மாதங்களாக நித்திரையின்றி தவித்து கஷ்டப்பட்ட பெண்மணி அன்றிரவு நன்கு உறங்கினாள். தொடர்நது அவளிடம் ஏற்பட்ட மாற்றங்கள் மருத்துவரை வியப்படையச் செய்தது. புற்றுநோய் செல்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு சுகமடைந்தாள். தேவனை மகிமைப்படுத்தி புற்று நோயாளிகள் மத்தியில் ஊழியம் செய்து வருகிறார்கள்.
ஆம், எனக்கன்பானவர்களே! சிறுவர் ஊழியம் நிச்சயமாகவே குடும்பத்திலும், சபையிலும் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும். இதுபோல ஏராளமான சம்பவங்கள் உண்டு. எழுத பக்கம் போதாது. இந்த மாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேதாகமப்பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவச் செல்வங்களுக்காக ஜெபிப்போம். உங்களுக்கு சிறுவர் ஊழியம் எடுக்க வாய்ப்பு கிடைக்குமானால், அதை கட்டாயம் பயன்படுத்துங்கள். சீரழிவை தந்து கொண்டிருக்கும் இச்சமுதாயத்தில் தேவனின் செயல்வீரர்களாக நம் சபைக் குழந்தைகளைத் தேவன் பயன்படுத்துவாராக.
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:
தேவன் செய்தியாளர்களை வல்லமையாய் பயன்படுத்த மற்றும் கலந்து கொள்ளும் வாலிபர்கள் தேவன் கரத்தில் கருவியாய் பயன்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864