Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 30-04.2023
Share:

By Village Missionary Movement

Sunday, 30-Apr-2023

இன்றைய தியானம்(Tamil) 30-04.2023

 

பராக்கிரமசாலியே! 

 

“இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்கிறவர்களாயிருக்கிறோமே” - ரோமர் 8:37

 

ஹாய் குட்டீஸ்! உங்களுக்கு தேவதூதன் கதை கேட்க ரொம்ப பிடிக்குமா? நீங்களும் தேவதூதன் போல ஆகணும், தலையில் பொற்கிரீடம் இருக்கணும் என்று ட்ரீம் எல்லாம் பண்ணி பார்த்திருப்பீங்க இல்லையா? ஆனால் தேவதூதன் கூட பேசின கிதியோன் அங்கிள் பற்றி வேத புத்தகத்திலிருந்து ஒரு சம்பவத்தை சொல்லவா?

 

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் போர் நடந்தது போல இஸ்ரவேலருக்கும் மீதியானியருக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். இஸ்ரவேலர்கள் தேவனை அறிந்திருந்தாலும், அவருக்கு கீழ்ப்படியாமல் போனதால மீதியானியர் கைகளில் தேவன் விட்டு விட்டாங்க. சில நேரங்களில் வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து வயலில் உள்ள பயிர் வகைகளை எல்லாம் அழித்துவிடும். இதே போல மீதியானியரும் கும்பல் கும்பலா வந்து நல்ல விளைந்திருக்கின்ற பயிர் வகைகளை அழித்துப் போட்டு இஸ்ரவேலருடைய ஆடு மாடுகள், சாப்பாட்டுக்கு வைத்திருக்கிற எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போயிருவாங்க. 

 

இஸ்ரவேல் ஜனங்கள் ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அவங்களை எதிர்த்து சண்டை போட யாருமே இல்லை. தன் வயலில் விளைந்திருக்கிற கோதுமையை அறுவடை செய்து எப்படியாவது வீட்டுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று கிதியோன் அங்கிள் பயந்து வேலை செய்து கொண்டிருந்தாங்க. திடீரென்று ஒரு தேவதூதன் தரிசனமாகி “பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” என்று தேவதூதர் சொன்னதைக் கேட்டதும், கிதியோன் அங்கிள்க்கு சந்தோஷம் வரல கர்த்தர் எங்களோடு இருந்தால் எதுக்கு எங்களை மீதியானியர் கையில் விட்டு விட்டார் என்று தேவதூதனோடு பேசினார். உனக்கு இருக்கிற இந்த பலத்தோடு போ. உன்னோடு இருக்கிறவர் நானல்லவா என்று சொன்ன தேவதூதனின் வார்த்தையைக் கேட்டதும் கிதியோன் அங்கிள்க்கு ஒரு புது நம்பிக்கை வந்தது.

 

சிறிய எண்ணிக்கையான வெறும் 300 பேரைக் கொண்டு பெரிய படைகளை கொண்ட மீதியானியரை முறியடித்து வெற்றியடைந்தார் கிதியோன். பயந்தாங்கோலி என்று சொன்ன அநேகர் கிதியோனைப் பார்த்து சல்யூட் அடித்தாங்க.

 

அன்பான தம்பி, தங்கச்சி! நீங்களும் உங்களால செய்ய முடியாத காரியங்களை நினைத்து பயப்படுகிறீர்களா? இயேசப்பா உங்களைப் பார்த்து, “பயப்படாதே, நான் உன் கூடவே இருக்கிறேன்” என்கிறார். அதனால் உன்னால முடியாத காரியத்தை ஈசியா செய்து win பண்ண வைப்பார். உன்னோட படிப்பு, விளையாட்டு, ரிசல்ட் குறித்த பயம் எதுவானாலும் ஜீசஸ் கூட இருக்கும்போது வெற்றி மேல் வெற்றி தான். பயந்தாங்கோலியை பராக்கிரமசாலியாய் மாற்ற நம்ம இயேசப்பாவால் மட்டும்தான் முடியும். நீங்க என்ன சொல்றீங்க! ஓகே தானே!

- Sis. பியூலா

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al