Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 28-04.2023
Share:

By Village Missionary Movement

Friday, 28-Apr-2023

இன்றைய தியானம்(Tamil) 28-04.2023

 

கிறிஸ்துவின் அன்பு

 

“…நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.” - ரோமர் 8:37

 

‘துயரத்தின் மனிதன்’ என அழைக்கப்பட்டவர்- தான் “வாட்ச்மேன் நீ” இவர் சீனாவை சேர்ந்த மாபெரும் தேவ மனிதர். தனது வாழ்நாளில் கடைசி 20 வருடங்களை சிறையிலேயே கழித்தார். கிறிஸ்துவை மறுதலிக்கச் சொல்லி வற்புறுத்தி அவரைச் சிறையில் வைத்து சித்திரவதை செய்தது சீன அரசாங்கம். தினமும் 8 மணி நேரம் கடுமையாக வேலை வாங்கப்பட்டார். அடுத்த 8 மணி நேரம் கம்யூனிச பாடல்கள் அவருக்கு போதிக்கப்பட்டன. மீதமுள்ள 8 மணி நேரமும் அவரை தூங்க விடாமல் எப்பொழுதும் கம்யூனிச கொள்கைகள் அடங்கிய பாடல்களும் பிரசங்கங்களும் அவர் காதில் சத்தமாய் விழும்படி அவரது சிறை அறையில் ஒளிபரப்பப்பட்டன. ஆனால் இவரோ எதற்கும் அசரவில்லை. அவர் கடைசி வரை கிறிஸ்துவை விட்டுக் கொடுக்காமல் தன் விசுவாசத்தில் உறுதியாக இருந்து சிறையிலேயே தன் ஓட்டத்தை முடித்து தன் பரம எஜமானரின் சந்தோஷத்துக்குள் பிரவேசித்தார். ஒரு அரசாங்கமே தோற்றது ஒரு எளிய தேவ மனிதரிடம். அவர் எழுதிய Normal Christian life, The spiritual man, இது போன்ற பல அற்புதமான புத்தகங்கள் இன்னும் அநேகரை விசுவாச வீரர்களாகவும் வேத உபதேசகர்களாகவும் மாற்றிக் கொண்டே இருக்கின்றன.

 

வேதத்தில் அப்போஸ்தலனாகிய பவுல், கிறிஸ்துவின் அன்பினிமித்தம் பல பாடுகளையும் உபத்திரவங்களையும் சகித்தார். புதிய ஏற்பாட்டில் பல நிருபங்களை எழுதின பவுல், 2 கொரிந்தியர் 11 ஆம் அதிகாரத்தில் தான் கிறிஸ்துவுக்காகவும் இயேசுவின் மீதுள்ள அன்பினிமித்தமாகவும் எவ்விதமான பாடுகளை சகிக்க வேண்டியதாயிருந்தது என பட்டியலிடுகிறார். ஒருமுறை, யூதர்களால் ஒன்று குறைய 40 அடியாக ஐந்து தரம் அடிபட்டேன் என்று சொல்கிறார். இவையெல்லாம் எதற்காக என நாம் சிந்திப்போம் என்றால், பவுல் கிறிஸ்துவின் மேல்கொண்டுள்ள அன்பினால்! எனவேதான், துன்பமோ, பாடுகளோ கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன் (ரோமர் 8: 39) என்று எழுதியுள்ளார். 

 

ஆம்! பிரியமானவர்களே! யார் தான் அல்லது எது தான் பிரிக்க முடியும் அவர் அன்பிலிருந்து? நாம் செய்கிற நல்ல காரியங்களுக்காகவோ, அவருக்காக நாம் படுகிற பாடுகளுக்காகவோ அல்ல, நாம் அவருடைய பிள்ளைகளாய் இருப்பதினால் மாத்திரமே நமக்காக சிலுவையில் அவருடைய அன்பை வெளிப்படுத்தினார். சாதாரணமான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிற நாம் எந்த விதமான அன்புக்கும் யாருடைய அன்புக்கும் அடிமையாகி விடக்கூடாது. கிறிஸ்துவின் அன்பு நமக்குள் இருந்தால் நம்மால் சும்மா இருக்கவே முடியாது. அவருக்காக எதையாவது சாதிக்க வேண்டும் என்று தான் நினைக்கக்கூடும் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துகிறவர்களாக நாம் அநேகருக்கு பிரயோஜனமாய் மாறுவோம்.

- Mrs. சக்தி சங்கர்ராஜ்

 

ஜெபக்குறிப்பு:  

வாலிபர் முகாமிற்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்க. பாத்ரூம் வசதி செய்யப்பட, மைதானம் சீரமைக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet