By Village Missionary Movement
Thursday, 27-Apr-2023இன்றைய தியானம்(Tamil) 27-04.2023
சிறகுகளின் மறைவில்
“அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்...” - சங்கீதம் 91:4
சில நாட்களுக்கு முன்பு நேஷனல் ஜியோகிராபிக் சேனலில் அமெரிக்காவில் உள்ள “எல்லோ ஸ்டோன்” தேசிய பூங்காவில் நடந்த தீ விபத்தைக் குறித்து ஒளிபரப்பப்பட்டது. அதில் வனக் காவலர்கள் தீ விபத்தின் சேதத்தை மதிப்பிடுவதற்காக சென்றனர். அதில் ஒரு வன காவலர் தன் கையில் உள்ள கருவியின் மூலமாக தீயினுடைய விளைவுகளை மதிப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது ஒரு மரத்தின் அடியில் பறவையொன்று தன் சிறகுகள் எல்லாம் தீயினுடைய சீற்றத்தால் கருகி, சாம்பலான நிலையில் சிலையாக நின்றதைக் கண்டார். ஆச்சரியத்தால் அவர் தன் கையில் உள்ள ஒரு குச்சியால் அந்தப் பறவையை தட்டினார். அதன் சாம்பல் கலைந்த பொழுது, அந்த இறந்த பறவையின் இறகுகளுக்கு கீழே உயிருடன் மூன்று பறவைக் குஞ்சுகள் இருப்பதைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்து போனார். வரவிருக்கும் பேரழிவைப் பற்றி நன்கு அறிந்த அன்பான தாய் பறவை, தனது சந்ததிகளை மரத்தின் அடிப்பகுதிக்கு அழைத்து சென்று நச்சுப் புகை எழும் என்பதை உணர்ந்து தனது இறகுகளுக்கு கீழே அவைகளை கூட்டிச் சேர்த்தது. அது பாதுகாப்பான ஒரு இடத்திற்கு பறந்து சென்று இருக்கலாம். ஆனால் அது தன் குஞ்சுகளைக் கைவிட மறுத்து தன் ஜீவனை நெருப்பு கவ்விக் கொள்ள அனுமதித்தது. வெப்பம் தனது சிறிய உடலை எரித்த போது உறுதியாக நின்றது. தான் இறக்க தயாராக இருந்ததால் தன்னுடைய சிறகுகளின் மறைவில் இருந்த குஞ்சுகள் வாழ்வடைந்தது. எத்தகைய ஒப்புமையற்ற தியாகத்தை இப்பறவை வெளிப்படுத்தியது!!
ஒரு கோழியின் இச்செயல் எவ்வளவு பெரிய தியாகமாக பார்க்கப்படுகிறது. உண்மை தான்! அப்படியானால் இயேசுகிறிஸ்து நமக்காக செய்த தியாகம் எத்தனை பெரியது! தம்முடைய பிள்ளைகளாகிய நம்மை சத்துருவின் கரங்களாகிய தீயினின்று பாதுகாக்க தம்மையே ஜீவ பலியாக சிலுவையில் ஒப்புக்கொடுத்தாரே! அந்த அளவற்ற அன்பை உணர்ந்து, இன்றே நம்மை அவருக்கு அர்ப்பணிப்போம்.
- Bro. பாக்கியநாதன்
ஜெபக்குறிப்பு:
வாலிபர் முகாமிற்கு தேவையான மின்சாரம் தடையின்றி கிடைக்க. மைக்செட் அனைத்தும் நேர்த்தியாய் செயல்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864