By Village Missionary Movement
Tuesday, 25-Apr-2023இன்றைய தியானம்(Tamil) 25-04.2023
சான்றிதழ்
“... தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்:..” - அப். 13:22
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும், பரிசுப் பொருட்களும் வழங்கப்படும். இந்த சான்றிதழ் பாதுகாக்கப்படும். இந்த சான்றிதழுக்கு உரிமையானவர் மற்றவர்களால் மிகவும் புகழப்படுவார். மேலும் கல்லூரி முடிவில் வழங்கப்படும் சான்றிதழ் மிகவும் விசஷித்த விதமாகவும் நன்னடத்தைக்காகவும் வழங்கப்படும்.
வேதத்தில், ஆண்டவராகிய இயேசு, பல தேவ மனிதர்களைக் குறித்து சான்றிதழை கொடுத்துள்ளார். மோசேயைக் குறித்து மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மை உள்ளவன் என்று குறிப்பிடுகிறார். ( எபிரெயர் 3: 2) நோவாவைக் குறித்து நீதிமானும், உத்தமனும் என்று குறிப்பிட்டு சான்றிதழ் தருகிறார். தாவீதைக் குறித்து சான்றிதழ் தரும் போது என்னுடைய இருதயத்திற்கு ஏற்றவன் எனக் கொடுக்கிறார். ஆனால் ஆண்டவர் சவுலைக் குறித்து சான்றிதழ் கொடுக்கும் போது நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது. (1 சாமுவேல் 15: 11) என்கிறார். சவுலை ராஜாவாக ஏற்படுத்தினதும் ஆண்டவர் தான். இவ்வாறாக சாட்சி பகிர்வதும் ஆண்டவர் தான். எனவே சவுல் ஆண்டவரிடம் இருந்து மிகவும் துக்ககரமான சான்றிதழைப் பெற்றுவிட்டார்.
இதை வாசிக்கின்றதான அன்பானவர்களே! நாம் ஒவ்வொருவரும் ஆண்டவருடைய இரத்தத்தினால் கழுவப்பட்டு அவரால் தெரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறோம். எனவே நாம் ஒவ்வொருவரும் அவரிடமிருந்து பெறும் சான்றிதழ் மிகவும் முக்கியமானது. நம்முடைய வீட்டில் நம்முடன் இருக்கும் நபர்கள், நாம் வேலை பார்க்கும் ஸ்தலங்களில், நம்மைச் சுற்றியுள்ள இடங்களில் நம்மைக் குறித்த சர்டிபிகேட் எப்படி இருக்கிறது என சற்று சிந்தித்து, தற்பரிசோதனை செய்து ஆராய்வோம்! இரட்சகராகிய இயேசுவிடமிருந்து நாம் பெறப்போகிற சான்றிதழ் எப்படி இருக்கப் போகிறது? தாவீதைப் போல ஆண்டவருடைய இருதயத்துக்கு ஏற்றவர்களா? இல்லை என்றால் சவுலைப் போல ஆண்டவருக்கு மனஸ்தாபத்தை ஏற்படுத்துகிறவர்களா? இன்றே நம்மை சரி செய்வோம்! நிச்சயம் நம்மை சரி செய்வதற்கு இயேசுவானவர் உதவி செய்வார்! பரலோக ராஜாவிடம் இருந்து நாம் பெறப்போகும் சான்றிதழே நம்மை நித்தியத்திற்கு நேராக வழி நடத்தும்.
- T. சங்கர் ராஜ்
ஜெபக்குறிப்பு:
முகாமிற்கான பணத்தேவைகள் ஒரு கோடியே 20 லட்சம் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864