Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  07-03-2021 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 07-Mar-2021

இன்றைய தியானம்(Tamil)  07-03-2021 (Kids Special)

உன் கூடவே வருபவர் 

“...திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.” – யோசுவா 1:9 

Hello குட்டீஸ்!  How are you? இன்றைக்கு உங்க ஒவ்வொருவரையும் இயேசப்பா எப்படி பாதுகாப்பாங்க என்று ஒரு கதை கேட்கலாமா? 

சல சலவென ஓடிக்கொண்டிருக்கும் ஆத்துக்குப் பக்கத்திலேயே ஒரு அழகான கிராமம் இருந்தது. அந்த கிராமம் எப்பொழுதுமே பசுமையாய் இருக்கும். அங்கேதான் ஜென்சி என்ற சிறுமி இருந்தா. அவ நல்லா ஜெபித்து, வேதம் வாசிக்கிற பிள்ளையாகவும், ஞாயிறு பள்ளியில் தவறாம கலந்து கொள்ளவும் செய்வாள். அவளுக்கு அப்பா, அம்மா இல்லாததால பாட்டி வீட்டில்தான் வளர்ந்து வந்தாள். பள்ளிக்கு செல்லும்போது நடந்தேதான் செல்வாள். அவள் நண்பர்கள் எல்லாரும் சைக்கிள் மற்றும் வண்டியில் பெற்றோருடன் போவார்கள், ஜென்சி மட்டும் தனியாக நடந்துதான் போவாள். அப்படி நடந்து செல்லும் போதெல்லாம் Sunday class -இல் சொல்லிக் கொடுத்த பாடலை பாடிக்கொண்டும் வசனத்தை சொல்லிக் கொண்டும் போவாள். 

ஒரு நாள் அவள் பள்ளிக்கு செல்லும்போது யாரோ பின்தொடர்வதைப் போல் இருந்தது. வசனத்தை சொல்லிக் கொண்டே வேகமாக நடந்து போனாள். School முடிந்து வரும் போதும், யாரோ பின் தொடர்வதைப் போல் இருந்தது, திரும்பிப் பார்ப்பதற்கு கூட ஜென்சிக்கு பயமா இருந்தது. பாட்டுப் பாடிக்கொண்டே ஓடி வந்து வீடு வந்து சேர்ந்தாள். நடந்ததை பாட்டியிடம் சொன்னாள். “பயப்படாதே! நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” என்று பாட்டி தைரியம் சொல்லிவிட்டு, நீ ஞானமாகவும், கவனமாகவும் நடந்து கொள்ள வேண்டுமென்று அறிவுரையும் கூறினார்கள். அடுத்த நாள் ஞாயிறு ஆலயத்திற்குச் சென்று விட்டு பாட்டியும், ஜென்சியும் நடந்து வந்தார்கள். பெரிய மீசையோடு, ஹைட்டா ஒருவர் வந்து நின்றார்.  “நானும் நான்கு நாட்களாக உன்னை பின்தொடர்ந்து, உன்னை கடத்த நினைத்தேன் உன் கூடவே வெள்ளை dress போட்ட ஒருவர் வருகிறார் அவர் யார்?” என்று கேட்டான். பாட்டி சொன்னாங்க “அவர்தான் இயேசு கிறிஸ்து” என்று. கிறிஸ்து அவருடைய பிள்ளைகளை எப்படி பாதுகாக்கிறார் என்று விவரமாய் சொன்னார்கள். ஜென்சி பாட்டுப் பாடிக் கொண்டே, பாட்டியின் கையை பிடித்து கொண்டு சந்தோஷத்தோடு வீடு திரும்பினாள். 

செல்லக் குட்டிகளே! கதையை கேட்டீங்கள்ல, நீங்க அனுதினமும் சந்திக்கின்ற ஒவ்வொரு காரியத்தையும் பெற்றோர்கிட்ட சொல்லணும். ஜென்சி இயேசப்பாவை தேடுகின்ற பிள்ளையா இருந்ததால, அவ போகும் இடமெல்லாம் தீமை அணுகாதபடி இயேசப்பா கூடவே இருந்து பாதுகாத்தார் இல்லையா! உனக்கு பயம் வரும் போதெல்லாம், இயேசப்பாகிட்ட சொல்லிடு, அவர் உன்னை எல்லா தீமைகளுக்கும் விலக்கி, பாதுகாப்பார். நீங்களும் ஜென்சியைப் போல Excellent – ஆன பிள்ளையா மாறப் போறீங்களா?  Very Good.
-    Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின்

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al holiganbet giriş holiganbet padişahbet bets10 extrabet royalbet süperbetin padişahbet betcio romabet giriş romabet queenbet bahiscasino betcio bahiscasino atlasbet matbet matbet giriş bahiscasino celtabet queenbet casibom jojobet