By Village Missionary Movement
Wednesday, 19-Apr-2023இன்றைய தியானம்(Tamil) 19-04.2023
இயேசுவுக்காக பாரம் சுமப்போம்
“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறார்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” - மத்தேயு11:28
1945 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 - ஆம் நாள் உலகமே அதிரும் சம்பவம் நிகழ்ந்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது அமெரிக்க ராணுவம், ஜப்பான் நாட்டின் நாகசாகி, ஹிரோஷிமா ஆகிய பகுதிகளில் அணுகுண்டு வீசி சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்களை கொன்று குவித்தது. அப்பொழுது அமெரிக்காவின் ஒரு இளம் ராணுவ அதிகாரி, ஏற்பட்ட அழிவினை மேற்பார்வையிட்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு வந்தார். வேதனையான பல நிகழ்வுகளை புகைப்படம் எடுத்த போது, ஒரு சிறுவன் தன் மரித்த சகோதரனை முதுகில் சுமந்து வந்ததை படம் எடுத்தார். அவர் அச்சிறுவனைப் பார்த்து, “டேய் தம்பி, அந்த செத்த சடலத்தை தூக்கி வீசி விட்டு நடந்து போ. இல்லாவிட்டால் சீக்கிரம் நீ களைப்படைந்து சோர்ந்து போவாய்” என்றார். அதற்கு அந்த சிறுவன், “இவன் என் சகோதரன். எனக்கு ஒன்றும் இவன் பாரமாக இல்லை.” என்றான். அதைக் கேட்ட அவர் ஸ்தம்பித்து நின்று கண்ணீர் சிந்தினார். அவர் எடுத்த புகைப்படமும், அந்த வாசகமும் இன்று ஜப்பான் முழுவதும் ஐக்கியப்பட ஆதாரமானது.
இன்று லட்சக்கணக்கான வாலிபர்கள் இயேசுவை அறியாத மரித்த நிலையில் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்களே. காயீனைப் போல் நான் அவனுக்கு காவலாளியோ என்று சொல்லும் மனநிலையில் இருக்கிறோமா? இல்லை, அவர்களை இயேசுவிடம் கொண்டு வர வேண்டுமே என்ற வாஞ்சை உண்டா? பாவம் , சாபம் , ரோகம், கடன் , பருவ இச்சை, வேலையில்லை என பல பிரச்சனைகளின் பாரத்தால் நரகத்தை நோக்கி செல்லும் நபர்களை அன்புடன் அழைக்கும் நேசரின் இன்ப சமூகத்திற்கு நாமும் அச்சிறுவனைப் போல, அவர்களை சுமந்து கொண்டு வருவோமா? அவர்கள் மீது அன்பு இருந்தால் “எனக்குப் பாரமில்லை” என்று சொல்லுவோம். ஏனெனில் அவன் என் சொந்த சகோதரன் சகோதரி! “இந்திய வாலிபர்கள் இயேசுவிற்கே” என்ற ”பாரம்” இன்றே நம்மிலே எழும்பட்டும்! இயேசுவுக்காய் பாரம் சுமக்க தீர்மானிப்போம்.
- Bro.பாக்கியநாதன்
ஜெபக்குறிப்பு:
நாம் பணி செய்கிற எல்லா பணித்தளங்களில் இருந்தும் ஒரு லட்சம் வாலிபர்கள் இந்த எழுப்புதல் வாலிபர் முகாமில் பங்கு பெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864