Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 18-04.2023
Share:

By Village Missionary Movement

Tuesday, 18-Apr-2023

இன்றைய தியானம்(Tamil) 18-04.2023

 

நற்கிரியைகள்  

 

"சோர்ந்து போகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பார்” - ரோமர் 2:7

 

தையற்காரர் ஒருவர் தனது கடையில் துணிகள் தைத்துக் கொண்டிருந்தார். அவருடைய மகன் அருகில் இருந்து அவர் வேலை செய்வதை பார்த்துக் கொண்டிருந்தான். தையற்காரர் ஒரு புதுத்துணியை எடுத்தார். அதை அழகிய பளபளக்கும் கத்திரிக்கோலால் துண்டுகளாக வெட்டினார். பின்னர் கத்திரிக்கோலைக் கால் அருகே போட்டுவிட்டு துணியைத் தைக்கலானார். துணியை தைத்து முடிந்ததும் சிறிய ஊசியை எடுத்துத் தனது தலையில் இருந்த தொப்பியில் குத்திப் பத்திரப்படுத்தினார்.

 

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகன் அவரிடம் "அப்பா, கத்திரிக்கோல் விலை உயர்ந்தது, அழகானது. அதை அலட்சியமாக காலடியில் போடுகிறீர்கள். ஊசி சிறியது , மலிவானது. ஆனால் தலையில் பத்திரப்படுத்துகிறீர்கள். அது ஏன்?” என்று கேட்டான். ஆர்வமாய்க் கேட்ட மகனுக்கு இதிலிருந்து ஒரு நல்ல காரியத்தை மனதில் பதியும்படி கற்றுக் கொடுக்க விரும்பினார். ஊசியை ஆங்காங்கே வைத்தால் கண்டுபிடிப்பது கஷ்டம், தொலைந்து விடும் என்பது முதல் காரணமாக இருந்தாலும், அவர் சொன்ன பதில் சிறுவன் உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிந்தது.

 

“மகனே, கத்திரிக்கோல் அழகாகவும் மதிப்புள்ளதாகவும் இருந்தாலும் அதன் செயல் வெட்டுவது, அதாவது பிரிப்பது! ஆனால், ஊசி சிறிதாகவும், மலிவானதாகவும் இருந்தாலும் அதன் செயல் சேர்ப்பது. ஒருவருடைய மதிப்பு அவருடைய செயலைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. உருவத்தை வைத்து அல்ல” என்றார்.

 

ஆம் பிரியமானவர்களே! நாமும் கூட எப்படிப்பட்ட கனி உடையவர்களாய் இருக்கிறோம். நல்ல மரம் நல்ல கனிகளைக் கொடுக்கும் என்று பார்க்கிறோம். அதுபோல நாமும் ஆவியின் கனியாகிய ஒன்பது கனிகளையும் அணிந்து கொள்வோம். (கலா:5:22- 23).

 

வேதத்தில் கூட பவுலைப் பற்றி பார்க்கும் போது, கடினமான சவுலாக இருந்த அவர், பவுலாக மாறிய பின் மிகுந்த கனிகளைக் கொடுத்தார். தன்னை கிறிஸ்துவுக்காக முழுவதுமாக அர்ப்பணித்தார். அவருடைய பிந்தின செயல்கள் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. பிரிந்தவர்களை ஒன்றிணைப்பது (பிலேமோன், ஒநேசிமு ) சிறையில் இருந்த போது கூட சுவிசேஷம் அறிவிப்பது, சபைகளுக்கு ஆலோசனை கூறுவது என்று அவருடைய கனிகள் நீண்டு கொண்டே சென்றன. 

 

 

நாம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறோம். பிறருக்கு நன்மை செய்கிறோமா? இல்லை, தீமைக்குப் பதில் தீமை செய்கிறோமா? சற்று சிந்திப்போம். கிறிஸ்துவைப் போல, பவுலைப் போல பாடுகள் மத்தியிலும் பிறருக்கு நல்ல கனிகளைக் கொடுப்போம். கிறிஸ்துவின் அன்பை எங்கும் கூறுவோம். ஆமென்.

- Mrs.திவ்யா அலெக்ஸ் 

 

ஜெபக்குறிப்பு:

திருச்சி எழுப்புதல் வாலிபர் முகாமிற்கு தமிழ்நாட்டில் உள்ள எல்லா திருச்சபைகளிலிருந்தும் ஒத்தாசை அளிக்க, வாலிபர்களை அனுப்பி வைக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al