By Village Missionary Movement
Monday, 17-Apr-2023இன்றைய தியானம்(Tamil) 17-04.2023
திருப்தி தருவது எது?
“நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது;..” - யோவான் 4: 14
தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்து கை நிறைய சம்பளம் வாங்குகின்ற ஜெயகர், சில நேரங்களில் அலுவலகத்தில் மிகமிக அமைதியற்ற ஒரு மனநிலையோடு காணப்படுவான். அவன் உற்சாகமிழந்து, பதட்டமான ஒரு தோற்றத்தோடு காணப்படும் போது அவனுடைய நெருக்கமான சில நண்பர்கள் அதன் காரணத்தைப் புரிந்து கொள்வார்கள். முந்தின நாள் இரவில் அவன் தவறான சந்தோஷங்களைத் தேடிச் சென்றிருக்கிறான் என்று.
சாலொமோன் ராஜா “அனுபவி ராஜா அனுபவி” என்ற விதமாக வாழ்க்கையின் சுகங்களை அனுபவிப்பதில் குறியாயிருந்தவன். ஆனால் சாலொமோன் நமக்குத் தரும் செய்தி என்ன? எதிலுமே உண்மையான நிறைவும், திருப்தியும் இல்லை என்பதுதான். எல்லாம் மாயையும் மனதுக்கு சஞ்சலமுமாய் இருக்கிறது என்றான்.
இந்த உலகத்தில் மனதுக்கு சற்று நேரம் சந்தோஷத்தையும், குதூகலத்தையும் அளிப்பதற்கு ஏராளமான காரியங்கள் உண்டு. அவற்றால் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கை என்னும் களத்தில் தன்னைப் பல்வேறு விதங்களில் மகிழ்ச்சியாக்கிக் கொள்ள முடியும். இவற்றை அனுபவிக்க அனுபவிக்க நடப்பது என்ன தெரியுமா? திருப்தியின்மையும், வெற்றிடமும் இன்னும் அதிக ஆசையுமே பெருகும். எவ்வளவுக்கதிகமாக நீங்கள் இந்த உலகப்பிரகாரமான சுகங்களை நாடிச் செல்கிறீர்களோ அந்த அளவிற்கு அது இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்ற தாகத்தையே உருவாக்கிக் கொண்டிருக்கும். எனவே உலக சந்தோஷங்களை நாடி ஒருபோதும் நீங்கள் திருப்தியடைந்த மனநிலையைப் பெறவே முடியாது. பணமோ, பொருளோ, ஆஸ்தியோ, அந்தஸ்தோ உணர்ச்சி ரீதியான சுகங்களோ எதுவாயினும் இதுவே உண்மை.
எனவே தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து “இந்த தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகம் உண்டாகும்” என்று கூறினார். ஆனால் கர்த்தர் நமக்குத் தரும் சந்தோஷமும் சமாதானமும் மனநிறைவும் என்றும் நம்முடைய இருதயத்தில் தொடர்ந்து சுரந்து கொண்டேயிருக்கும். நாம் வாழ்கின்ற விதம் நம்மைக் குதூகலப்படுத்துமா, துக்கப்படுத்துமா என்று
பார்க்க வேண்டும். அந்த வாலிபன் ஜெயகர் சந்தோஷமடைந்த வழிகள் அவன் மனத்திரையில் வரும் போது அவை அவனைத் துக்கப்படுத்துகின்றன. ஒருவனுடைய மகிழ்ச்சியின் எதிரி பெரும்பாலும் வெளியே அல்ல, அவனுக்குள்ளேயே இருக்கிறது.
- S. பேர்லின் செல்லாபாய்
ஜெபக்குறிப்பு:
சுகமளிக்கிற ஆராதனைகளில் சரீர பலவீனத்தோடு பங்கு பெறுகிற ஒவ்வொருவரும் பரிபூரண சுகத்தைப் பெற்றுக் கொள்ள ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864