Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 15-04.2023
Share:

By Village Missionary Movement

Saturday, 15-Apr-2023

இன்றைய தியானம்(Tamil) 15-04.2023

 

விலைமதிக்க முடியாத முத்து

 

“என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்” - ஓசியா 8:12

 

ருமேனியாவில் கம்யூனிஸ்ட் மற்றும் நாஸ்திகவாதிகளின் கொடுமைக்கு மத்தியில் மிகவும் வைராக்கியமாக ஊழியத்தை செய்து வந்தவர் தான்- ரிச்சர்ட் உம்பிராண்ட் என்ற தேவ மனிதர். ருமேனியாவில் ரஷ்ய எல்லைப் பகுதியில் அவர் ஊழியம் செய்த போது நடந்த சம்பவம் ஒன்றை நான் உங்களுக்கு சொல்கிறேன். அது ஒரு பனிக்காலம். பனியோடு மென்மையான சாரல் மலையும் கடுங்குளிரும் சேர்ந்து காணப்பட்டது. ரஷ்யாவிலிருந்து இருவர் அவரைக் காணும்படி வந்தனர். அவர்களை வரவேற்ற உம்பிராண்ட் தன்னை பார்க்க வந்ததின் நோக்கத்தை எண்ணி சந்தோஷப்பட்டார். காரணம் அவர்கள் வேதாகமம் வேண்டும் என கேட்டு வந்தனர். ருமேனியாவைப் போல ரஷ்யாவிலும் கிறிஸ்தவர்கள் துன்பப்படுத்தப்பட்டனர். இரண்டு வாரம் கழித்து நன்றிக் கடிதம் வந்தது. தாங்கள் கொடுத்த வேதாகமம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அது மாத்திரமல்ல நாங்கள் சொந்த வேதாகமத்தை வைத்திருப்பதை அறிந்த பக்கத்து கிராம கிறிஸ்தவர்கள் எங்களிடம் வந்து வேதத்தை வாங்கி வாசிக்கின்றனர். இப்படி அநேகர் கேட்டபடியால் நாங்கள் ஒரு முடிவுக்கு வந்தவர்களாய் தாங்கள் கொடுத்த இரு வேதாகமங்களையும் 32 துண்டுகளாக கிழித்து கொடுத்துள்ளோம். 32 கிராமங்களிலும் ரஷ்ய கிராம மக்கள் வாசித்து பயனடைகின்றனர் என எழுதியிருந்தது. இதை வாசித்த உம்பிராண்ட் வைராக்கியமாய் ருமேனியாவில் மட்டுமல்ல, ரஷ்யாவிலும் தேவ பணியினை செய்து வந்தார்.

 

அன்பானவர்களே, வேதம் கிடைக்காமல் ஏங்குகிற ருமேனியர்களும், ரஷ்யர்களும் அநேகர் உண்டு. ஆனால் வேதத்தைக் கைகளில் வைத்திருந்தும் அதை வாசிக்காத கிறிஸ்தவர்கள் எவ்வளவு உண்டு! நாம் தேவனுடைய நியாயத்தீர்ப்பில் எப்படி தப்பிக்க முடியும்? வேதக்காரர்கள் என்று அழைக்கப்படுகிற நாம் எத்தனை நாட்கள் வேதத்தை வாசிக்கிறோம்? நம்மில் அநேகர் வேதத்தை வாசிக்காமல் வேஷக்காரர்களாகவே சுற்றித் திரிகிறோம். அன்று அந்த ரஷ்யர்கள் தங்கள் கைகளில் வேதம் கிடைத்த அந்த அரைமணி நேரத்திலோ அல்லது அதிலும் குறைவான நேரத்திலோ எவ்வளவு கருத்தாய் கவனத்துடனும் ஜெபத்துடனும் வாசித்து இருப்பார்கள்! என்று யோசித்துப் பார்ப்போம். நேரமெடுத்து வேதம் வாசியுங்கள். உங்கள் வாழ்க்கை முத்தாக மாறிவிடும். கர்த்தர் அதிசயமாய் தம்முடைய வார்த்தைகள் மூலம் நம்மை வழி நடத்துவதைக் காண்பீர்கள்.

- Mrs. ஞானசெல்வம் செல்வராஜ்

 

ஜெபக்குறிப்பு: 

பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் நடைபெறும் ஊழியங்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş betsmove betsmove giriş kargabet kargabet giriş piabellacasino piabellacasino giriş supertotobet supertotobet giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet vizebet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza grandpashabet grandpashabet betsalvador bahiscasino casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş carkbet giris casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş