Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 14-04.2023
Share:

By Village Missionary Movement

Friday, 14-Apr-2023

இன்றைய தியானம்(Tamil) 14-04.2023

 

அமேசான் நதி

 

“...இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக் கொள்ளுவோம்.” - எபிரெயர் 2:4  

 

அமேசான், தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள மிக நீளமான நதியாகும். அதன் நீளம் சுமார் 6400 கி.மீ. இதன் பெரிய ஆற்றுப்படுகை ஸ்விட்சர்லாந்து நாட்டுக்கு சமமான பரப்பளவு கொண்டது. தென் அமெரிக்கா கண்டத்தின் வட பகுதியில் உள்ள பெருநாட்டில் இந்நதி ஆரம்பித்து, கொலம்பியா நாட்டை கடந்து, பிரேசில் நாட்டின் வழியாக, அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது. இதில் மூவாயிரம் வகை மீன் இனங்களும் உள்ளன. இந்நதியின் இருபுறமும் மிகப்பெரிய அமேசான் மழைக்காடுகளும் அமைந்துள்ளது. இதில் 25 லட்சம் பூச்சி இனங்களும், இரண்டாயிரம் வகை பறவை இனங்களும், ஆயிரக்கணக்கான தாவர வகைகளும் உள்ளன. “பிராங்கா” எனப்படும் மனிதனை உண்ணும் மீன் இனங்களும் சுமார் 40 அடி நீளம் வளரக்கூடிய ‘அனகோண்டா’ என்ற பாம்பு இனமும், கொடிய விஷமுள்ள தவளைகளும் குறிப்பிடத்தக்கவைகள் ஆகும்.

 

ஒருமுறை அட்லாண்டிக் பெருங்கடல் வழியே இந்நதிக்குள் நுழைந்த கப்பல் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக நடு ஆற்றில் நின்று போனது. நாட்கள் பல கடந்தும் சரி செய்யப்படாத நிலையில் அக்கப்பலில் இருந்த மாலுமிகளும் மற்ற பயணிகளும் கப்பலை விட்டு வெளியே செல்ல இயலாததால் மிகுந்த மனவேதனை அடைந்தார்கள். கையில் இருந்த உணவும் குடிநீரும் குறைந்து பின் முழுவதும் பசியாலும் தாகத்தாலும் வருந்த ஆரம்பித்தார்கள். குடிக்க நீர் இல்லாததால் நா வறண்டு சாகும்படி துவண்டு போனார்கள். அவர்களுக்கு உதவி செய்ய யாரும் முன் வரவில்லை. அநேக நாட்கள் சென்ற பின்பு அவ்வழியே சென்ற, பெருநாட்டைச் சேர்ந்த படகில் இருந்த சிலர் நிலைமையை அறிந்து அவர்களை நோக்கி, “ஐயா, மதியற்றவர்களாக இப்படி சாக வேண்டிய அவசியம் என்ன? உங்கள் கப்பல் நிற்கிற இந்த ஆற்றில் நல்ல தண்ணீர் ஓடுகிறது, ஒரு தோண்டியை கொண்டு வேண்டிய மட்டும் எடுத்து பருகுங்கள்” என்று சத்தமிட்டு சொன்னார்கள். கப்பலில் பயணித்த அனைவரும் அதைக் கேட்டு உடனே தங்களிடம் இருந்த தோண்டியை இறக்கி நீரை எடுத்து பருகி உயிர் பிழைத்துக் கொண்டார்கள்.

 

பிரியமானவர்களே, நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தமது மாசற்ற ரத்தத்தை சிந்தி இலவசமாய் சம்பாதித்துக் கொடுத்த இரட்சிப்பை அறியாதபடி, அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் கல்லறையை நோக்கி செல்கிறார்களே. “இப்பொழுதே அநுக்கிரக காலம், இப்பொழுதே இரட்சணிய நாள்” (2 கொரி. 6:2) பெரு நாட்டு மக்களைப் போல அழிவில் உள்ள ஜனத்திற்கு இயேசுவைக் காண்பித்து நித்திய ஜீவனுக்கு நேராக வழிநடத்துவோமாக!

- Bro. பாக்கியநாதன்

 

ஜெபக்குறிப்பு:

மோட்சப் பயணம் தின தியானத்தை வாசிக்கிற ஒவ்வொருவரும் பக்தி விருத்தி அடைய ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş betsmove betsmove giriş kargabet kargabet giriş piabellacasino piabellacasino giriş supertotobet supertotobet giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet vizebet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza grandpashabet grandpashabet betsalvador bahiscasino casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş carkbet giris casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin