Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 13-04.2023
Share:

By Village Missionary Movement

Thursday, 13-Apr-2023

இன்றைய தியானம்(Tamil) 13-04.2023

 

கருப்பும் வெள்ளையும்

 

“பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.” – யோவான் 3: 20

 

தாத்தாவும், பேரனும் பூங்கா ஒன்றில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். நான்காம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவன் தாத்தாவிடம் ஒரு கேள்வி கேட்டான். ‘தாத்தா! தாத்தா! என் கனவில் அடிக்கடி இரண்டு நாய்கள் வருகின்றன. ஒன்று கருப்பு நிறம் மற்றொன்று வெள்ளை நிறம். எப்போதும் அவை சண்டையிட்டுக் கொள்கின்றன. இந்த இரண்டு நாய்களில் எந்த நாய் ஜெயிக்கும்? என்றே தெரியவில்லை” என்றான். அதற்குத் தாத்தா, ‘எந்த நாய்க்கு தீனி போடப்பட்டதோ அந்த நாய் தான் ஜெயிக்கும்” என்றார்.

 

மெய்தான், மனித வாழ்விலும் அப்படித்தான். நம் இருதயத்தில் எதற்கு அதிகம் இடம் கொடுக்கிறோமோ, அதுதான் நம் சிந்தையை ஆட்கொண்டு, செயல் வடிவம் பெறும். “....இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.” அதுவே செயலாகவும் மாறும்.

 

மாம்ச சிந்தை மரணம். அநேக இருளான காரியங்கள் நம் வாழ்க்கையில் இருந்தால் நம்மில் இயேசுவானவர் வாசம் செய்ய முடியாது. உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளியாகிய இயேசு கிறிஸ்துவிடம் நம்மை அர்ப்பணித்தால், நம் பாவங்களை மன்னித்து, அவைகளில் இருந்து நமக்கு விடுதலை கொடுத்து, நம் கிரியைகளை நற்கிரியைகளாக மாற்றுவார். “இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார்.”

 

பரிசுத்த வேதாகமத்தில் கலாத்தியர் 5: 19- 21 வசனங்களில் மாம்சத்தின் கிரியைகள் யாவை என்பதைப் பற்றியும், 22, 23 வசனங்களில் நம் வாழ்வில் இருக்க வேண்டிய கனிகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். இயேசுவே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறார். எனவே, அவரை நம் தெய்வமாக ஏற்றுக்கொண்டு அவரைப் பின்பற்றுவோமானால் ஆக்கினைத்தீர்ப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம், நித்திய ஜீவனையும் அடையலாம்.

- Mrs. ஜெயந்தி பாக்கியநாதன்

 

ஜெபக்குறிப்பு:

7000 ஜெபக்குழுக்களை உருவாக்கும் பணிகளில் பணித்தள ஊழியர்களுக்கு தேவ ஒத்தாசை காணப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al jojobet giriş jojobet casibom giriş bets10 extrabet royalbet süperbetin jojobet casibom holiganbet galabet matbet matbet giriş hilbet bahiscasino celtabet antikbet betoffice