Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 12-04.2023
Share:

By Village Missionary Movement

Wednesday, 12-Apr-2023

இன்றைய தியானம்(Tamil) 12-04.2023

 

சேவலின் தொனி

 

“அப்பொழுது அவன்: அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் கூவிற்று” - மத்தேயு 26:74

 

அதிகாலையில் மக்களைத் தட்டியெழுப்புவது சேவல். வேதத்தில் ஆண்டவர் இதற்கு ஒரு இடத்தை தந்திருக்கிறார். சேவல் நம் முன்னே நடந்து வரும்போது அதனுடைய கெம்பீரத் தோற்றம் மிகவும் அழகானது. அதைப் பார்க்கும் கறிக் கடைக்காரன், ‘இந்த சேவல் நல்ல விலைக்குப் போகும்’ என்று யோசிப்பான் நாம் ‘இது யார் வீட்டு சேவல், நம்ம தோட்டத்தைக் கிண்ட வந்திருக்கிறது’ என யோசிப்போம். ஆனால் கிறிஸ்தவ சமுதாயத்தில் சேவல் என்றவுடன் பேதுரு நினைவு கூரப்படுவார். சேவல் ஒரு வல்லமையான எச்சரிப்பின் செய்தியாளர் என்று கூட கூறலாம். பேதுருவை மனங்கசந்து அழ வைத்தது சேவல். எத்தனை நற்செய்தியாளர் வந்தாலும் ஒருவர் உள்ளத்திலும் எழுப்புதல் தீ பற்றி எரியவில்லை. இந்த சேவல் இரவு இருட்டில் குரலை உயர்த்திக் கூவியபோது பேதுருவை அழவைத்து விட்டது. சேவல் மூலம் பேதுரு உணர்வடைந்தார். சிலுவைக்கு முன் முற்றிலும் நம்மைத் தாழ்த்த எதைக் கொண்டும் தேவன் நம்முடன் பேசுவார். ஏன் பிலேயாம் தீர்க்கத்தரிசியை எச்சரிக்க தேவன் கழுதையின் வாயைத் திறக்க வில்லையா?

 

இந்த சேவல் தொனி ‘நாம் இருப்பது தேவ கிருபையாலே’ என்ற செய்தியையும் கூறுகிறது. ஆனால் மனிதனோ பெருமையாக பேசி, சுயபலத்தை சார்ந்து கீழே விழுந்து விடுகிறான். ஆண்டவர் கூறினபோது, பேதுரு தன் பெலவீனத்தை உணரவில்லை, சுயபெலனை நம்பினான். கெத்செமனே தோட்டத்திலும் ஜெபிக்கும் நேரத்தில் ஜெபித்திருந்தால் தேவ பெலத்தை பெற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் பேதுரு மறுதலித்ததற்கு காரணம், அசட்டை, சுயபெலனை நம்பினது.

 

தேவபிள்ளைகளே, அன்று சேவலின் தொனி பேதுருவை உணர்வடையச் செய்தது. இந்தத் தியானத்தின் மூலம் தேவன் உங்களோடு இடைப்படுகிறார். தேவனுடைய வார்த்தை உங்களுக்கு வரும்போது சரிப்படுத்த வேண்டிய காரியங்களை சரிப்படுத்திவிடுங்கள், மனக்கடினமாகாதீர்கள். நொறுங்குண்ட உள்ளம் உடையவர்களுக்கு ஆண்டவர் சமீபமாயிருக்கிறார். எப்படி ஆண்டவர் பேதுருவுக்கு ஆதி அன்பை உணர்த்தி புதுவாழ்வு தந்தாரோ அப்படியே உங்களுக்கும் செய்ய வல்லவர். மீண்டும் ஆண்டவரிடம் ஓடி வந்த பேதுருவைப் போல அவரண்டை ஓடி வாருங்கள்.

- Mrs.கிரேஸ் ஜீவமணி

 

ஜெபக்குறிப்பு:

நமது அலுவலகத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரையும் ஆண்டவர் விசேஷித்த ஞானத்தினால் நிரப்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş betsmove betsmove giriş kargabet kargabet giriş piabellacasino piabellacasino giriş supertotobet supertotobet giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet vizebet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza grandpashabet grandpashabet betsalvador bahiscasino casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş carkbet giris casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş