Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  06-03-2021
Share:

By Village Missionary Movement

Saturday, 06-Mar-2021

இன்றைய தியானம்(Tamil)  06-03-2021

மன்னிக்கும் குணம் 

“...ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” – கொலோ. 3:13 

ஒரு குடும்பத்தில் கணவன் மனைவியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. ஒரு நாள் ஏற்பட்ட சண்டை முற்றிவிட்டது, இருவரும் பிரிந்துவிடுவோம் என்ற முடிவுக்கு வந்தனர். அன்று இரவு கணவர் ஜெபிக்க சென்றார். அப்பொழுது தேவன் அவரிடம் பேசினார், “நான், நீ செய்த எல்லா பாவத்தையும் மன்னித்து ஏற்றுக்கொண்டேன். நீ மீண்டும் மீண்டும் தவறு செய்து என்னிடம் வந்து நீ மன்னிப்பு கேட்கும்போது நானும் உன்னை மன்னித்தேன். நான் உன் பாவத்தை மன்னித்ததுபோல, உன் மனைவி செய்த தவறையும் நீ மன்னித்து விடு” என்று பேசினார். கிறிஸ்து என் பாவங்களை மன்னித்ததுபோல நானும் உன் பாவத்தை மன்னித்து விட்டேன் என்று சொல்லி தன் மனைவியுடன் ஒப்புரவாகிவிட்டார். 

வேதத்தில், ஒரு எஜமானிடத்தில் 10,000 தாலந்து கடன்பட்ட ஊழியக்காரன் தன் எஜமானிடத்தில் போய், தன்னால் கடனை அடைக்க முடியவில்லை என்றும் தன்னை மன்னிக்கும்படியாக தாழ விழுந்து வேண்டினான். உடனே எஜமான் மனதிரங்கி அவனது கடனை மன்னித்தார். அந்த ஊழியக்காரன் புறப்பட்டு போகையில் தன்னிடத்தில் 100 தாலந்து கடன்பட்ட வேலைக்காரனைப் பார்த்து, கடனை திருப்பித் தர வேண்டும் என்று கூறினான். அந்த வேலைக்காரன் கடனை திரும்பத் தர முடியவில்லை என்று கூறி மன்னிப்பு கேட்டபோது, அவனை அந்த ஊழியக்காரன் கடினமாக நடத்தினான். இதைக் கேட்ட எஜமான் நான் உனக்கு மன்னித்ததுபோல, நீயும் மன்னிக்க வேண்டாமோ என்று சொல்லி, அவனது முழு கடனையும் அடைக்கும்படி கட்டளையிட்டான். 

பிரியமானவர்களே! இதைப்போல் தான், நம்முடைய எல்லா பாவக் கடன்களையும் இயேசு கிறிஸ்து சிலுவையில் மன்னித்துவிட்டார். இதை அறிந்து அனுபவித்து வரும் நாம், மற்றவர்கள் செய்யும் தவறை மன்னிக்காமல் இருதய கடினத்துடன் இருக்கிறோமா? சிந்திப்போம். பிறரது சிறு சிறு குறைவுகளையும் குற்றங்களையும் பெரிதாக எண்ணி, அவைகளை மன்னித்து மறக்காமல் இருக்கும் நமது மனநிலை மாறட்டும். நாம் பிறரது குற்றங்களை மன்னிக்காவிட்டால், நம்முடைய பாவங்களும் மன்னிக்கப்படாது அவற்றை நியாயத்தில் கொண்டு வந்து நிறுத்துவார் என்ற உண்மையை உணர்வோம். இந்த நாள் பிறரை மனதார மன்னித்து ஏற்றுக்கொள்ளும் நாளாய் மாறட்டும். 
-    S. காந்திராஜன் 

ஜெபக்குறிப்பு:
அலுவலகப் பணிக்கு அத்தியாவசிய தேவையான ஜெராக்ஸ் மிஷின் வாங்கப்பட ஜெபியுங்கள். 


இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al holiganbet giriş holiganbet padişahbet bets10 extrabet royalbet süperbetin padişahbet betcio romabet giriş romabet queenbet bahiscasino betcio bahiscasino atlasbet matbet matbet giriş bahiscasino celtabet queenbet casibom jojobet