Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 11-04.2023
Share:

By Village Missionary Movement

Tuesday, 11-Apr-2023

இன்றைய தியானம்(Tamil) 11-04.2023

 

சிலுவைக்கு அருகில்

 

“நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்;..” - ஏசாயா 53:5

 

கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து குடும்ப ஜெபம், ஆலய ஆராதனை, ஓய்வு நாள் பாடசாலை என பாரம்பரிய முறைப்படி வளர்க்கப்பட்டேன். போதகர் சொல்லும் வசனங்களை முந்திக் கொண்டு முதல் ஆளாக வாசிப்பதில் அவ்வளவு பெருமை எனக்கு உண்டு. ஒரு முறை விடுமுறைக்காக என் பாட்டி வீட்டிற்கு சென்றிருந்த போது, ஒரு கன்வென்ஷன் கூட்டத்தில் பாடும் சிலாக்கியம் பெற்றேன். பிறகென்ன, நான் எல்லாவற்றிலும் சரியாய் இருக்கிறேன். அதனால் தான் எனக்கு வாய்ப்புகள் வருகிறது. எனக்கு நிறைய தாலந்துகள் இருக்கிறது என்று என் மனம் சிறகடித்து பறந்து கொண்டிருந்தது. முதல் நாள் கூட்டத்தில் பிரசங்கியார் கொடுத்த தேவ வார்த்தையின் மூலம் அநேகர் தன்னுடைய பாவ பழக்கங்களை அறிக்கையிட்டு சிகரெட், பீடி, பொடி டப்பா போன்றவற்றை தூக்கி எறிந்து தன்னை தேவனுக்கென்று அர்ப்பணித்தனர். இதைப் பார்த்த நானோ, மிகவும் பக்தியுள்ளவள் போல் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தேன். இரண்டாம் நாள் கூட்டத்தில் இயேசு கிறிஸ்துவின் அன்பையும் அவருடைய சிலுவைப் பாடுகளையும் விவரித்து சொன்னபோது என் உள்ளம் உடைக்கப்பட்டது, நான் பாவி என்பதை ஒப்புக் கொண்டேன். எனக்குள் இருந்த பாவங்கள், பெருமைகள், பொய்கள் என அனைத்தையும் அறிக்கையிட்டு, மறுபடி பிறந்த அனுபவத்தை பெற்றுக் கொண்டேன்.

 

இயேசுவை சிலுவையில் அறையும் போது அவரோடு இரண்டு கள்ளர்களும் சிலுவையில் அறையப்பட்டார்கள். ஒருவனோ பெருமையாய் பேசி இயேசுவை பரியாசம் பண்ணினான். மற்றொருவனோ, அவர் சிலுவையில் பேசின வார்த்தைகளைக் கேட்டு, பாவ உணர்வடைந்தவனாய், நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம் என்று தன்னைத் தானே நிதானித்து அறிந்து, தன் பாவங்களை அறிக்கையிட்டான். விளைவு இரட்சிப்பின் சந்தோஷத்தை பெற்றுக் கொண்டு பரலோக வாசியாய் மாறி விட்டான். 

 

எனக்கன்பானவர்களே! சிலுவைக் காட்சிக்கு முன் தன் பாவங்களை உணர்ந்த கள்ளனைப் போல, சிலுவைக்காட்சி என்னையும் மாற்றியது. ஆம், சிலுவைக்கு முன்பாக நம் பெருமைகள் உடைய வேண்டும். அவருடைய தியாகத்தோடு நம்முடைய தியாகத்தையோ அவருடைய பாடுகளோடு நம்முடைய பாடுகளையோ ஒப்பிடத்தான் முடியுமா? அவருடைய கிரியைகளுக்கு முன் நம் கிரியைகள் நிற்கத்தான் முடியுமா? ஆம், சிலுவை அண்டை வந்து நம் வாழ்வை சீர்தூக்கிப் பார்ப்போம். நம் சுயம் சாகடிக்கப்படட்டும்.

- Mrs. சரோஜா மோகன்தாஸ்

 

ஜெபக்குறிப்பு: 

வாலிபர் எழுப்புதல் முகாமின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş betsmove betsmove giriş kargabet kargabet giriş piabellacasino piabellacasino giriş supertotobet supertotobet giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet vizebet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza grandpashabet grandpashabet betsalvador bahiscasino casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş carkbet giris casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş