Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 10-04.2023
Share:

By Village Missionary Movement

Monday, 10-Apr-2023

இன்றைய தியானம்(Tamil) 10-04.2023

 

தேவன் அறிவார்

 

“…கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது;..” - 2 நாளா.16: 9

 

ஒரு நாள் நான் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தேன். மூன்று பேர் அமரும் அந்த இருக்கையில் என அருகாமையில் ஒரு வாலிபப்பெண் ஹெட் செட் மூலமாக பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் அருகில் ஒரு வயதான தாயார் அமர்ந்திருந்தார்கள். கொஞ்ச நேரம் கழித்து அந்தத் தாயார் அந்த வாலிபப் பெண்ணிடம், “என் போனுல சார்ஜ் இல்ல, நீ காதுல இருக்கிறதை எடுத்து சார்ஜ் போட முடியுமா?” என்று கேட்டார்கள். அந்த பெண் “சிரித்துக் கொண்டே பாட்டி இதுல சார்ஜ் போட முடியாது” என்று சொன்னாள். வளர்ந்து வரும் தொழில் நுட்பம், நம் பெற்றோருக்கோ வீட்டிலுள்ள பெரியவர்களுக்கோ தெரிவதும் புரிவதும் கஷ்டம் தான். ஆகவே இதைப் பயன்படுத்தி என் பெற்றோருக்கு எதுவுமே தெரியாது என்று நினைத்து வாலிபர்கள் பல பாவங்களில் ஈடுபட்டுக் கொண்டு வருகிறார்கள். ஆனால் கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். நாம் செய்யும் பாவமான காரியங்களை அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

 

வேதாகமத்தில் கூட சிம்சோனுக்குத் தேவன் பெலனை கொடுத்தார். கழுதையின் தாடை எலும்பினால் ஆயிரம் பேரைக் கொன்றார். அது மாத்திரமல்ல ஓர் ஆட்டுக்குட்டியைக் கிழித்து போடுவது போல, தன் கையில் ஒன்றுமில்லாதிருந்தும் சிங்கத்தை கிழித்து போட்டார். கர்த்தர் கொடுத்த பெலனை சரியாக பயன்படுத்தாமல், உலக இச்சைகளுக்கு இடம் கொடுத்து பாவத்தில் விழுந்தார். தன் பெற்றோருக்கு கீழ்ப்படியாமல், அவர்களுக்கு விருப்பமில்லாத அந்நிய பெண்ணைத் திருமணம் செய்தார். அவருடைய பெலத்தின் முன் பெற்றோரின் வார்த்தைகள் அற்பமாய் மாறின. முடிவு பரிதாபம்.

 

வாலிபர்களே! உங்கள் பெற்றோர் படிப்பறிவோ, உலக ஞானமோ இல்லாதவர்களாக இருக்கலாம். பெற்றோர்களுக்கு எதுவுமே தெரியாது என்று நீங்கள் அவர்களை ஏமாற்றலாம். ஆனால் உங்கள் மனதில் தெய்வ பயம் இருந்தால் உங்களால் உலக இச்சைக்கு இடம் கொடுக்க முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்கிற ஒவ்வொரு பாவத்திற்கும் ஒரு நாள் ஆண்டவர் கணக்குக் கேட்பார் என்பது உங்களை பாவத்தில் விழாமல் காக்கும். வாலிபர்களே, இப்பொழுதே மனதின் உள்ளே உள்ள பாவ சிந்தனைகளை ஆண்டவரிடம் அறிக்கையிட்டு விட்டு விலகுங்கள். பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான் (நீதி 28: 13) என்னும் வசனத்தின் படி தன் பாவங்களை அறிக்கையிடும் போது தேவன் உன்னுடைய பாவங்களை மன்னித்து உன் வாழ்வில் புதிய காரியங்களைச் செய்வார்.

- S. அஞ்சலி 

 

ஜெபக்குறிப்பு:

வாலிபர் முகாமிற்கு அநேக வாலிபர்களை அழைத்து வரும் தன்னார்வலர்கள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al