Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம் (Tamil) 09-04.2023 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 09-Apr-2023

இன்றைய தியானம்(Tamil) 09-04.2023 (Kids Special)

 

வெற்றி சிறந்தார் 

 

“... நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;” - யோவான் 11:25

 

ஹலோ! குட்டிச் செல்லங்களே! நல்லா இருக்கீங்களா? Exam முடிந்து விட்டதா? சிலருக்கு Exam நடந்து கொண்டிருக்கும், ஒரு சிலர் ரிசல்ட்க்காக காத்துக் கொண்டிருப்பீங்க. எதுவானாலும் இயேசப்பா உங்க கூட இருந்தாங்கன்னா, வெற்றி தான்! இயேசு கிறிஸ்து மரணத்தையும் சாத்தானையும் ஜெயித்து உயிர்த்தெழுந்த நாளைத் தான் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகிறோம். ரொம்ப ஹாப்பியா இருக்கீங்களா? பக்கத்தில் கவலையோடு இருக்கிறவர்களுக்கு ஹாப்பி ஈஸ்டர் சொல்லி உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். ஓகே வா குட்டீஸ்?

 

சண்டே ஸ்கூல் டீச்சர் ஒருவர் தன் சீனியர் மாணவர்களிடம் அடுத்த வாரம் வரும் பொழுது மாற்கு 17 ஆம் அதிகாரத்தை படித்து வர வேண்டுமென்று சொல்லியிருந்தார்கள். போகின்ற வழியிலே கசகசவென்று பேசிக்கொண்டே போனார்கள். ஸ்கூலில் கொடுக்கிற ஹோம் ஒர்க் செய்ய, எக்ஸாமுக்கு படிக்கவே நேரமில்லை, இதை வேற படிக்கணுமா என்று சிலர் சொல்லிக் கொண்டார்கள். குட்டீஸ் படிப்பு எவ்வளவு முக்கியமோ அதை விட சண்டே ஸ்கூலில் சொல்லிக் கொடுக்கின்ற வேத பாடம் ரொம்ப ரொம்ப முக்கியம். இது நிறைய பேருக்கு தெரியாததால் சின்ன வயதிலேயே சாத்தானுக்கு அடிமையா கெட்ட பிள்ளைகளாய் மாறி விடுகிறார்கள். நீங்க எல்லாரும் நல்ல பிள்ளைங்க தானே! சூப்பர்.

 

அடுத்த வாரமும் வந்துவிட்டது. யாரெல்லாம் மாற்கு 17 ஆம் அதிகாரத்தை படித்தது? கை தூக்குங்க என்று கேட்டதும் ஏறக்குறைய எல்லோரும் கைதூக்கினார்கள். அக்காவுக்கு சிரிப்பு வந்து விட்டது. மாற்கு புத்தகத்தில் 16 அதிகாரம் தானே இருக்கிறது என்றதும் வெட்கத்தோடு தலை குனிந்தார்கள். வாரத்தில் முதல் நாள் அதிகாலை சூரியன் உதயமாகின்ற போது இயேசுவின் கல்லறை திறந்திருந்தது. இயேசு உயிர்த்தெழுந்தார் அவர் இங்கே இல்லை என்ற நற்செய்தி மாற்கு 16 ஆம் அதிகாரத்தில் இருக்கிறதை கதை போல அக்கா சொல்லி முடித்தார்கள். எல்லாருடைய உள்ளத்திலும் உயிர்த்தெழுந்த வல்லமை கிரியை செய்ய ஆரம்பித்தது. “அக்கா, நாங்க இப்பொழுதே மாற்கு 16ஆம் அதிகாரத்தை வாசிக்கப் போகிறோம்” என்று சொன்னதும் அக்காவுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. எல்லோரும் தனிப்பட்ட விதத்தில் இயேசுவை ருசி பார்க்க ஆரம்பித்தார்கள். பாவத்தை அறிக்கை செய்து உயிர்த்தெழுந்த நாதரின் கைகளில் தங்களை அர்ப்பணித்தார்கள். அன்றைக்கே ஒரு பண்டிகை கொண்டாடின சந்தோஷம் அவர்களின் உள்ளத்தில் வந்தது. எல்லோரும் அட்வான்ஸ் ஹேப்பி ஈஸ்டர் சொல்லிக்கொண்டார்கள். செல்லக்குட்டி பிள்ளைகளுக்கு அன்பான ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்கள். 

அன்பான தம்பி, தங்கச்சி உங்க வாழ்க்கையிலும் உயிர்த்தெழுந்த இயேசுவின் வல்லமையைக் கண்டுகொள்ள நினைக்கிறீர்களா? உங்க பாவ சாபங்களுக்காய் சிலுவை சுமந்த இரட்சகரை உன் இருதயத்தில் ஏற்றுக் கொள்வாயானால், உன்னை கடைசிவரை தூக்கிச் சுமந்து வெற்றி சிறந்து வாழும் படி உனக்கு உதவி செய்வார். அல்லேலூயா. 

- Mrs. ஜீவா விஜய்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al