By Village Missionary Movement
Thursday, 06-Apr-2023இன்றைய தியானம்(Tamil) 06-04.2023
தாகமாயிருக்கிறேன்
“அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.” - யோவான் 19:28
இயேசு சிலுவையில் மொழிந்த ஐந்தாம் வார்த்தை:
ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்தில் இருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார் நம் இயேசு (யோவான் 7:37,38). இப்படி நம்முடைய தாகத்தைத் தீர்ப்பேன் என்று சொன்னவராகிய இயேசு, நான் தாகமாய் இருக்கிறேன் என்று சொல்கிறார். சிலுவையில் இயேசு கிறிஸ்துவின் தாகம் ஜனங்களின் ஆத்துமாக்களைக் குறித்த தாகம். ‘அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்’ என இயேசுவின் தாகத்தைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி மிக அழகாக கூறியுள்ளார். (ஏசாயா 53: 11) தம்முடைய சாயலில் படைக்கப்பட்ட மனிதன் தமது மந்தையில் வந்து சேர வேண்டும் என்பதே நமது தேவனின் பெரிதான தாகமாயிருக்கிறது. மந்தையில் சேரா ஆடுகளை அவரிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியில் நாம் ஈடுபடும் பொழுது அவருடைய தாகத்தைத் தீர்க்கிறவர்களாக இருக்கின்றோம்.
இதற்காக ஒரு உண்மை சம்பவத்தை இங்கே கூற வருகிறேன். 1780 ஆம் வருடத்தில் இராபர்ட் ரேய்கஸ், லண்டன் மாநகரை சுற்றியிருந்த பகுதிகளில் வாழ்ந்து வந்த படிப்பறிவற்ற ஏழைப் பிள்ளைகளைக் குறித்து மனபாரமடைந்தார். அவர்களது வாழ்க்கையை மாற்றி அமைக்க ஏதாவது செய்ய வேண்டுமென்று முயற்சி செய்தார். ஞாயிற்றுக்கிழமைகளில் அப்பிள்ளைகளுக்குப் பள்ளிகளைத் திறந்து வகுப்புகளை நடத்தும்படி சில பெண்களை ஏற்படுத்தினார். வேதாகமத்தை பாடப் புத்தகமாக பயன்படுத்தி அந்த ஆசிரியர்கள் அந்த ஏழைக் குழந்தைகளுக்கு வாசிக்க கற்றுக் கொடுத்து, வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள ஞானத்தை அவர்களுக்கு போதித்தார்கள். நூறு குழந்தைகளோடு தொடங்கிய ஞாயிறு பள்ளி என்று அழைக்கப்பட்ட இந்த வகுப்புகள் விரைவில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் பிள்ளைகளின் வாழ்க்கையைத் தொட்டது. 1831இல் லண்டன் மாநகரில் ஞாயிறு பள்ளிகள் 10 லட்சத்திற்கு அதிகமான குழந்தைகளை சென்றடைந்தது.
இராபர்ட் என்ற ஒரு தனிப்பட்ட மனிதரின் முயற்சி என்று சொல்வதை விட, பரிசுத்த வேதாகமத்தில் உள்ள தேவனின் பிரியம் என்னவென்பதை அறிந்து கொண்டார் என்றே சொல்லலாம். பசியாயிருப்பவர்கள், ஆதரவற்றிருப்பவர்கள் இவர்கள் மீது நாம் காண்பிக்கும் கரிசனையானது நமது தேவனின் தாகத்தைத் தீர்ப்பதாக இருக்கின்றது. நாமும் ஆண்டவரின் தாகத்தை தீர்க்கும்படி அவர் நம்மை வழி நடத்துவராக.
- Bro. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
ஆமென் வில்லேஜ் டிவி ஒளிபரப்பப்படுவதற்கு தேவையான பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864