By Village Missionary Movement
Friday, 05-Mar-2021இன்றைய தியானம்(Tamil) 05-03-2021
உள்ளபடியே கூறுங்கள்
“…நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.” – சங்கீதம் 37:16
என்னுடைய மகள் திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்க்க பயோடேட்டாவை ரெடி பண்ணினோம். எங்களுக்கு தெரிந்த நபரிடம் அதைக் கொடுத்த போது எத்தனை பவுன் போடுவீர்கள் எவ்வளவு ரொக்கம் கொடுப்பீர்கள் என்று கேட்டார்கள். எங்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை, ஏனென்றால் ஊழியம் செய்யும் என்னிடம் சொல்லும் அளவு கையில் இல்லை, என்ன செய்வதென்று திகைத்தோம். அன்று எங்கள் ஆலயத்திற்கு சென்று ஜெபிக்க ஆரம்பித்தேன். என்னிடம் உள்ள பொருட்களை ஆண்டவரிடம் கூறினேன். இவ்வளவு கொஞ்ச பொருட்களை வைத்து நான் எப்படி திருமணம் செய்வேன் என்று கலங்கி கண்ணீர் வடித்தேன். அன்று என்னுடைய வேத வாசிப்பு பகுதியை வாசித்தேன். “துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப் பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது” என்ற வசனத்தை (சங். 37:16)ஐ தேவன் காண்பித்து என்னை தேற்றினார். தேவனை நம்பி காத்திருந்தேன். கடவுளுக்கு பயந்து, வேலையோடு தேவப்பணி செய்கிற மருமகனை கர்த்தர் கொடுத்தார்.
வேதாகமத்தில் 2 இரா. 4லிலே, கடன்பட்ட தீர்க்கதரிசியின் குடும்பத்தை பார்க்கிறோம். அவர் மனைவி எலிசாவிடம் “ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை” என்றாள். தீர்க்கதரிசியின் மனைவி தன்னுடைய சூழ்நிலையை தீர்க்கதரிசியிடம் உள்ளபடியே கூறுகிறாள். அங்கு அவளுடைய குறைவு நிறைவாக்கப்படுகிறது.
இதை வாசிக்கும் என் அன்பு சகோதரனே-சகோதரியே! உங்களோடு தேவன் பேசிக்கொண்டிருக்கிறார். இந்த காரியத்திற்கு நான் என்ன செய்வேன்? என் மகள் திருமணம், மகனின் கல்லூரி கட்டணம், கட்டி வரும் வீட்டிற்கு இன்னும் தேவை.... என்று பல காரியங்களை குறித்து கலங்கி கொண்டிருக்கிறீர்களோ? அநேகரிடம் உங்கள் தேவையை சொல்லி உதவி கிடைக்காமல் கைவிடப்பட்ட நிலையில் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களை நோக்கியே இந்த வார்த்தை கடந்து வருகிறது. அந்த தீர்க்கதரிசியின் மனைவி தீர்க்கதரிசியிடம் தன் காரியத்தை அறிவித்ததை போல, நீங்களும் உங்கள் காரியங்களை வானத்தையும், பூமியையும் படைத்த தேவனிடம் கூறுங்கள். உங்களிடம் உள்ள பொருட்களோ, பணமோ, கொஞ்சமாக இருந்தாலும் தேவன் அதைப் பெருக்கி உங்கள் காரியங்களை நிறைவாகவும் ஆசீர்வாதமாகவும் மாற்ற அவர் வல்லமையுள்ளவர்.
- Mrs. V. கிறிஸ்டி
ஜெபக்குறிப்பு:
ஜெபக் கூடாரத்தின் அத்தியாவசிய தேவையான PA System வாங்கப்பட ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250