Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 31-03.2023
Share:

By Village Missionary Movement

Friday, 31-Mar-2023

இன்றைய தியானம்(Tamil) 31-03.2023

 

நியாயம் தீர்க்காதிருங்கள் 

 

“நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்’’ - மத்தேயு 7:1 

 

நிம்மி என்ற சிறுமியின் கையில் இரண்டு ஆப்பிள் இருந்தது. அவள் அக்கா அவளிடம் எனக்கு ஒன்று தா என்றாள். உடனே நிம்மி ஒவ்வொரு ஆப்பிளாய் இரண்டையும் கடித்தாள். உடனே அக்கா, ‘’நீ சரியானவள் ஒருவருக்கும் ஒன்றும் தரமாட்டாய் உன்னையெல்லாம் நம்பக்கூடாது’’ என்று கூறி அவ்விடத்தை விட்டுச் சென்றாள். அக்காவின் பின்னாலேயே வந்த நிம்மி அவள் கரத்தைப் பிடித்து ஒரு ஆப்பிளை அதில் வைத்து இது மிகவும் இனிப்பாக உள்ளது. இதை வைத்துக் கொள் என்றாள். உடனே அக்கா தன் தவறை உணர்ந்து நிம்மியை அனைத்து முத்தமிட்டாள்.

 

இதுபோல் தான் நாமும் பலநேரங்களில் ஒருவரது செயலைப் பார்த்ததும் தவறாக சிந்தித்து இவர்கள் இப்படித்தான் என்று நிதானித்து பேசிவிடுகிறோம். அல்லது நியாயந்தீர்த்து விடுகிறோம். கர்த்தர் சங்.50:20-ல் நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய் பேசி, உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய் எனக் கூறி கடிந்து கொள்கிறார். பரிசேயன் வீட்டில் பந்தியிருந்த இயேசுவின் பாதத்தில் பரிமள தைலம் பூசிய ஸ்திரீயை பாவியான ஸ்திரீயாக பரிசேயன் பார்க்கிறான். ஆனால் இயேசு, அந்த ஸ்திரீயை மிகவும் அன்பு கூருகிறவளாகக் கண்டார். ஆகவே நாம் மற்றகளை பார்க்கிற விதம் இயேசுவைபோல் மாறினால் நலமாயிருக்கும். நாம் மற்றவர்களை நியாயந்தீர்க்க முற்படும்போது நம் கண்ணில் உத்திரம் இருக்கிறது என்பதை உணரும் இருதயத்தை தேவன் நமக்கு உண்டாக்கட்டும்.

 

அன்பானவர்களே! நம் பார்வைகள், நம் வார்த்தைகள் குறித்து எச்சரிக்கையாயிருப்போம். மற்றவர்களை இவர்கள் குற்றமுள்ளவர்கள், நல்லவர்கள் என நியாயம் தீர்த்து பேச வேண்டாம். தாவீதை போல் கர்த்தாவே, என் வாய்க்கு காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக் கொள்ளும். (சங்.141:3) என தினமும் ஜெபித்து சோதனையை மேற்கொள்வோம். ஏனெனில் நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம் என 1கொரி.11:31 ல் வாசிக்கிறோம். இதுவரை மற்றவர்களை நியாயந்தீர்த்து பேசியதை தேவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்போம். இந்தத் தவறை மீண்டும் தொடராதிருப்போம். எல்லாக் காவலோடும் நம் இருதயத்தைக் காத்துக் கொள்வோம். அதனிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படட்டும். அல்லேலூயா.

- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்

 

ஜெபக்குறிப்பு:

திரைப்பட ஊழியங்கள் மூலம் சந்திக்கப்படும் நபர்கள் இயேசுவை அறிந்து கொள்ள ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al