By Village Missionary Movement
Thursday, 30-Mar-2023இன்றைய தியானம்(Tamil) 30-03.2023
நன்மையானதைத் தருவார்
‘’நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக அதைச் செய்வேன்’’ - யோவான் 14:13
ஐந்து வயது நிரம்பிய வில்லியம், தன் தாயுடன் தனது பிறந்த நாளுக்காக பொம்மை கடைக்குச் சென்று தனக்குப் பிடித்த விளையாட்டுச் சாமானை வாங்கச் சென்றான். அங்கு அநேக பொம்மைகளும், விளையாட்டு சாமான்களும் நிரம்பி இருந்தன. அதில் அவனுக்கு விருப்பமான, கலர்கலர் விளக்குகளுடன் விதவிதமான சத்தங்களுடன் வேகமாய் செல்லும் கார் இருந்தது. அதைக் கண்டவுடன் அவன் தன் தாயிடம் அடம் பிடித்து இந்த கார் தான் எனக்கு வேண்டும் என்று தொந்தரவு செய்தான். தாயும் பார்க்கலாம் என்று கூறிவிட்டு பின்பு வீடு திரும்பினார்கள். அடுத்த நாள் பிறந்தநாள் பரிசாக அவன் விரும்பிய அதே கார் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அதைக் கண்ட அவனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அப்பொழுது அவன் சகோதரன் ‘’இந்த காருக்கே இவ்வளவு சந்தோஷப்படுகிறாயே, அம்மா உனக்கு இதைவிட பெரிதான ரிமோட் கண்ட்ரோல் கார் வாங்கிக் கொடுக்க இருந்தார்கள். ஆனால்
நீ இதை வாங்க வற்புறுத்தியதால் இதை வாங்கிக் கொடுத்தார்கள்’’ என்றான். அதைக் கேட்டபோது வில்லியமின் மனதில் சோகம் கவ்விக் கொண்டது.
புதிய ஏற்பாட்டில் யோவான் எழுதின சுவிசேஷத்தில் நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக அதைச் செய்வேன் (யோவான் 14:13) என்று எழுதப்பட்டுள்ளது. நம் தேவனிடம் நமது தேவையை கதறி, கெஞ்சி கேட்டுப் பெற்றுக் கொள்கிறோம். கர்த்தரும் அதைத் தருகிறார். ஆனால் தேவன் ஒருவேளை நாம் கேட்டதைவிட நன்மையானதை கொடுக்க சித்தமாயிருந்திருப்பார். ஆனால் நம் ஜெபம் அதை தடை செய்திருக்கும்.
இதை வாசிக்கின்றதான பிரியமானவர்களே! நாம் நம்முடைய தேவைகள் நிறைவடையும் படியாகவும் பூர்த்தியாக வேண்டும் என்று தான் கேட்போம். ஆனால் நம்முடைய ஆண்டவர் இதை தருவதற்கு வல்லமையுள்ளவர்தான். ஆனால், இதில் மகிமைப்படமாட்டார். நாம் ஜெபிக்கும்போது ‘’உம்முடைய சித்தத்தின்படி எங்களுக்கு வாய்க்கச் செய்யும் ஆண்டவரே’’ என்று அவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து ஜெபிக்கும் போது அவர் நன்மையானதை நமக்குத் தர வல்லவராயிருக்கிறார். எனவே, நாம் நம்முடைய ஆசை, விருப்பங்களை அவரிடம் திணிக்காமல் அவர் நமக்கு அருளும் நன்மையையே பெற்றிடுவோம். அதன் மூலமாக பிதாவின் நாமம் மகிமைப்படும்!
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
நம்மிடம் முழு வேதாகமத்தைப் பெற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் அதை கிரமமாக வாசித்து சத்தியத்தில் வளர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864