Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 29-03.2023
Share:

By Village Missionary Movement

Wednesday, 29-Mar-2023

இன்றைய தியானம்(Tamil) 29-03.2023

 

அடிமைத்தன வாழ்வா?

 

‘’முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்.’’ - ரோமர் 6:17

 

நான் சிறுவயதாக இருக்கும் போது வாசித்த கதை ஒன்று ஞாபகம் வருகிறது. இரு நாடுகளுக்கிடையே போர் நடக்கும் போது போரில் வெற்றி பெற்ற ராஜா, தன்னோடு போரிட்டு தோற்றுப் போன இராஜாவையும் அவருடைய குடிமக்களையும், அவருக்குண்டான ஆஸ்திகள், ஆடு, மாடுகள், மற்றும் விலை உயர்ந்த பொருட்கள், இராஜாவின் கிரீடம் மற்றும் மோதிரங்கள், வாள் மற்றும் அவருடைய சேனைகள் அனைத்தையும், தனக்கு அடிமைகளாக வைத்துக் கொள்வது வழக்கம். ஒரு நாட்டிற்கு அடிமையாகக் கொண்டு போகப்பட்டாலோ, அல்லது விற்கப்பட்டாலோ, அதிலிருந்து வெளியே வருவது அவ்வளவு சுலபமல்ல. மரணம் வரையும் அடிமையாக வாழ நேரிடலாம். ஆனால் அடிமையாக விற்கப்பட்டு ஆண்டவரால் உயர்த்தப்பட்ட ஒரு மனிதனைக் குறித்து சிந்திப்போம்!

 

வேதத்தில் அடிமையாக விற்கப்பட்டு ஆண்டவரால் உயர்த்தப்பட்ட மனிதன் என்றதும் நம் நினைவுக்கு வருபவர் யோசேப்பு தானே. யோசேப்பு அடிமையாக பிறக்கவில்லை, ஆனால் அடிமையாக விற்கப்பட்டார். செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்தாலும், அவருடைய பலத்த கைக்குள் அடங்கி இருந்ததற்கு காரணம் கர்த்தர் யோசேப்போடே இருந்தார். (ஆதி39:2) இதை வேறொருவிதத்தில் கூறினால் யோசேப்பு கர்த்தரோடு நெருங்கி வாழ்ந்தார் என்று நாம் கூற முடியும். இன்று நமக்கும் தேவனுக்கும் உள்ள உறவு என்ன? அவன் காரியசித்தியுள்ளவன் என்பதை அவனுடைய எஜமானனால் காண முடிந்தது. வாலிபப் பருவத்தில் பாலிய இச்சைகளுக்கு விலகி ஓடிய யோசேப்பின் பரிசுத்தம் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறதா. இன்று நம்முடைய வாழ்வில் பரிசுத்தமாய் வாழ நாம் எவ்வளவு முயற்சி எடுக்கிறோம்! தன்னோடு கூட காவலில் வைக்கப்பட்டிருந்த சுயம்பாகி, பானபாத்திரக்காரனாகிய இவர்களுடைய முகங்கள், துக்கமாயிருப்பதைக் கண்ட யோசேப்பு அவர்களை கரிசனையோடு விசாரித்தார். இதேபோல் நமக்கு அருகில் இருக்கிறவர்கள் துக்கமாக இருப்பதைக் கண்டால் கரிசனையோடு விசாரித்து உதவுகிறோமா? எனக்கே 1008 பிரச்சனை இருக்கு, யாரையும் என்னால் விசாரிக்க முடியாது என்ற மனநிலையோடு வாழ்கிறோமா? சிந்திப்போம். சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லும் அவனுடைய புத்திகூர்மையும், சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா என்று தேவனை உயர்த்திய விதமும் ஒரு நாட்டின் ராஜாவையே பிரமிக்க வைத்தது. அவனுக்கு மோதிரம், மெல்லிய வஸ்திரம், பொன் சரப்பணியை அணிவித்து, தன்னுடைய இரண்டாம் இரதத்தில் ஏற்றி, எகிப்து தேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாய் மாற்றிவிட்டது.

 

இதை வாசிக்கிற அன்பு நண்பர்களே! ஏதோ ஒரு காரியத்தில் அடிமைப்பட்டு அங்கலாய்க்கிறீர்களோ! யோசேப்போடே இருந்த தேவன் அவர் நம்மோடும் இருப்பார். அடிமைத்தனத்தை, ஆச்சரியமாய் மாற்ற அவரால் முடியும். விசுவாசிப்போம், அர்ப்பணிப்போம் தேவன் நம்மையும் உயர்த்துவார். அல்லேலூயா.

- A. பியூலா

 

ஜெபக்குறிப்பு:

புதிதாக ஆரம்பித்துள்ள பணித்தளங்களில் பயன்படுத்த 5 இரு சக்கர வாகனங்கள் அத்தியாவசியமாக தேவையுள்ளது ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş holiganbet güncel giriş holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş matbet matbet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş