Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 24-03.2023
Share:

By Village Missionary Movement

Friday, 24-Mar-2023

இன்றைய தியானம்(Tamil) 24-03.2023

 

நூற்றுக்கு அதிபதி

 

“ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்” - 1 கொரி.10:24  

 

இன்றைய வேதபகுதியிலே, நாம் காணும் நூற்றுக்கு அதிபதி ரோமப் படைத் தலைவன். இயேசுகிறிஸ்துவே இவரை பாராட்டுமளவிற்கு இவரிடம் பல நல்ல குணங்கள் காணப்பட்டன. அவைகளை நாம் சிந்தித்து அந்நற்குணங்கள் நம்மில் குறைவுபடுமேயானால் அவற்றை பெற்றுக்கொள்ள முயற்சிப்போமா?

 

வேலைக்காரன் மீது அக்கறை: சமுதாயத்தில் முக்கிய அந்தஸ்திலிருந்த இந்த நூற்றுக்கதிபதி அரசு அதிகாரியாகவும் இருந்தார். இவருடைய கட்டளைக்கு கீழ்ப்படிய அநேகர் உண்டு. இவ்வளவு அதிகாரமும், அந்தஸ்தும் பெற்ற அவர் தன்னிடம் வேலை செய்யும் வேலைக்காரர்கள் மேலும் அக்கறை உடையவராய் இருந்தார். அவர்களுடைய நலனிலும் கரிசனை கொண்டிருந்தார். ஆகவேதான் இயேசு கப்பர்நகூமிற்கு வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டதும் அவருக்கு எதிரே சென்று தன் வேலைக்காரனின் சுகத்திற்காக வேண்டிக்கொண்டார். அவருடைய வாழ்விலும், குடும்பத்திலும் உள்ள காரியங்களுக்காக இயேசுவிடம் பிரார்த்திக்க அநேக விண்ணப்பங்கள் இருந்திருக்கலாம். ஆனாலும் அதையும் தாண்டி சுயநலமில்லாமல் காணப்பட்டார்.

 

தன்னை தாழ்த்தினார்: வேலைக்காரனை சொஸ்தமாக்கும்படி அவரது வீட்டிற்கு வர ஆயத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவிடம் நூற்றுக்கதிபதி, “ஆண்டவரே! நீர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தை சொல்லும், என் வேலைக்காரன் சொஸ்தமாவான்” என்றார். தன் வேலைக்காரனுக்காகக் கூட பாரப்பட்ட அவர் நிச்சயமாக சமுதாயத்தில் நல்ல மனிதர் என பெயர் பெற்றவராகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனாலும் அவரது உள்ளத்தில் நான் குறைவுள்ளவன், பாவி என்ற தெளிவான சிந்தனை இருந்தது. ஆகவே, ஆண்டவரே நீர் என் வீட்டிற்கு வர நான் பாத்திரனல்ல என்கிறார். பொதுவாகவே, மனுஷனுடைய இயற்கையான சுபாவமென்னவென்றால், பிரபலமான ஒரு ஊழியரோ, வேறு யாரோ நம் வீட்டிற்கு வருவதாகக் கூறினால் நாம் அதை ஒருபோதும் மறுப்பதில்லை. காரணம், “இவர் எங்கள் வீட்டிற்கே வந்திருக்கிறார். எங்கள் குடும்பத்திற்கு அவர் அவ்வளவு நெருக்கம்” என்று பலரிடமும் சொல்லிக் கொள்வதில் நமக்கு அலாதி பிரியம். ஆனால் நூற்றுக்கு அதிபதியோ நம்மைப்போலல்ல; தன்னை தாழ்த்தினார்.

 

பிரியமானவர்களே! நமக்குக் கீழோ, நம் வீட்டிலோ பணிபுரிபவர்களின் நலனில்

நமக்கு அக்கறை உண்டா! அல்லது “உனக்கு உடம்பு சரி இல்லையா? ஆனாலும் என் வேலையை முடித்துவிட்டு போய் படுத்துக் கொள்” என சொல்கிறவர்களாய் இருக்கிறோமா? அடுத்ததாக, நம்மைக் குறித்து என்ன எண்ணுகிறோம்? பிறர் நம்மைப் புகழ்வதால் நான் மிகவும் நல்லவன் என எண்ணிக் கொண்டிருக்கிறோமா! அல்லது இயேசுவின் பார்வையில் என் இதயம் எப்படி இருக்கிறது என அறிந்து நம்மைத் தாழ்த்துகிறோமா! சிந்திப்போம்.

- Mrs. ஜாஸ்மின் பால் 

 

ஜெபக்குறிப்பு: 

திங்கட்கிழமை தோறும் நடைபெறும் முழு இரவு ஜெபத்தில் பரிசுத்த ஆவியானவர் வல்லமையாய் கிரியை செய்ய ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al