Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 16-03.2023
Share:

By Village Missionary Movement

Thursday, 16-Mar-2023

இன்றைய தியானம்(Tamil) 16-03.2023

 

மீறின பின்பும் வெறுக்காதவர்

 

‘’தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்து வைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்’’ – சங்கீதம் 27:5

 

இந்த உலகத்தில் ஆண்டவருக்கு விரோதமாக, அவர் மனதை துன்பப்படுத்துகிற அநேக காரியங்களை நாம் செய்த போதும், செய்கிற போதும் நம்மை வெறுக்காத கைவிடாத ஒரே நபர் நம் ஆண்டவர் மட்டுமே! நம்மை எந்த சூழ்நிலையிலும் கைவிடாதவராய் விட்டு விலகாதவராய் இருக்கிறார். ஒருவேளை நம் கடந்த காலமோ அல்லது நாம் மறைவாய் செய்கிற பாவங்களோ நம்மோடு இருப்பவர்களுக்கு தெரிந்தால், நம்மை நேசிக்கிறேன் என்று சொல்கிற அநேகர் நம்மோடு கூட இருக்க மாட்டார்கள். நம்மை வெறுத்து விடுவார்கள். ஆனால் அவரோ என் மகன், மகள் என்னைக் கிட்டிச் சேர மாட்டார்களா, தங்கள் பாவத்தை விட்டு மனம் திரும்பி விட மாட்டார்களா என்று கண்ணீரோடு காத்திருக்கிறவராய் உங்கள் அருகிலே தான் இருக்கிறார்.

 

என்னுடைய வாலிபப் பிராயத்தில் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கும் போதும், ஆண்டவரோடு பேச முடியாமல் தவிக்கும் போதும், என்னை கிறிஸ்துவுக்குள் வழிநடத்திய சகோதரி என்னை அழைத்து ஜெபம் செய்வார்கள். நானும் குழப்பமான சூழலிலும் தனிமையான வேளையிலும் அந்த சகோதரியிடம் தொடர்பு கொண்டு ஜெபிக்கும்படியாக கேட்பேன். ஒருமுறை என் மனதில் ஒரு கேள்வி எழும்பிற்று. அது என்னவெனில், நான் இப்பொழுது என் பிரச்சனைக்காக இந்த சகோதரியை தொடர்பு கொள்கிறேனே ஒருவேளை இந்த சகோதரி இல்லாவிட்டால் நான் யாரை தொடர்பு கொள்வேன்? என்ற கேள்விதான் அது! அந்த சமயத்தில் ஆண்டவர் என்னுடன் தெளிவாக பேசினார். எப்பொழுதும் உனக்குள்ளேயே இருக்கிற என்னை மறந்து விட்டாயே என்று. நான் அந்த வேளையில்தான் உணர்த்தப்பட்டேன். இந்த உலகத்தில் நாம் அவரை முழுமையாக நம்பாத போதும், நேசிக்காத போதும் அவர் நம்மை எப்பொழுதும் நேசிக்க மட்டுமே தெரிந்தவராக இருக்கிறார். அவரை ஒருநாளும் மறந்து விடக்கூடாது. அவர் ஒருவரே நம்பத்தக்கவர். நம்முடைய புலம்பலைக் கேட்டு நம்மை அரவணைக்கிற, ஆற்றித் தேற்றுகிற அன்பின் ஆண்டவர்! அவருடைய கரங்களைப் பிடித்துக் கொண்டு அவரையே முழுமையாக நம்பி நீங்கள் பயணிப்பீர்களானால், எந்தவித traffic-ம் உங்கள் வாழ்க்கையில் இருக்காது.

 

வாலிப சகோதர, சகோதரியே! ஆண்டவரே இப்படியாக கேட்போம். “இந்த உலகத்தில் யார் என்னை விட்டுப் போனாலும் நீங்க மட்டும் என்னை விட்டு போகாதீங்க” என்று. உங்களை நான் என் முழு மனதுடன் நேசிக்கிறேன் என்று உள்ளத்தின் ஆழத்திலிருந்து கேட்கும்போது அவர் உங்களை நிரப்ப வல்லவராய் இருக்கிறார்.

- Mrs. திவ்யா பெர்னார்டு

 

ஜெபக்குறிப்பு:

நமது பத்திரிக்கை ஊழியங்களில் எழுத்து வேலைகளில் ஈடுபடும் நபர்களை தேவன் விசேஷித்த ஞானத்தினால் நிரப்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al