By Village Missionary Movement
Sunday, 12-Mar-2023இன்றைய தியானம்(Tamil) 12-03.2023
நன்மைக்கு பலன் உண்டு
“நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.” - கலாத்தியர் 6: 9
ஹலோ! குட்டிச் செல்லங்களா? எப்படி இருக்கீங்க, சாப்டீங்களா? நல்லா தூங்குனீங்களா? ஆமா சரியான நேரத்துக்கு சாப்பிடணும். நைட்டு ரொம்ப நேரம் முழிச்சுக்கிட்டே இருக்காம சீக்கிரமா தூங்கணும். அப்பத்தான் ஸ்கூலுக்கு ஜம்முனு கிளம்ப முடியும் சரிதானே.
ஓகே. இப்ப கதை கேட்கலாமா? ஆறாம் வகுப்பு படிக்கின்ற பிள்ளைகளுக்கு ரோஸ்மேரி டீச்சர் தான் கிளாஸ் டீச்சர். படிப்பு மட்டுமல்லாது வாழ்க்கைக்குத் தேவையான நல்ல காரியங்களை சொல்லிக் கொடுப்பாங்க. உங்களுக்குத் தெரியாத நபரோ அல்லது தெரிந்த நபரோ உங்களை தொட்டு பேசினால் அல்லது மடியில் உட்கார வைத்து பேசினால் அவாய்ட் பண்ண வேண்டும் என்று சொல்வது மட்டுமல்ல நிறைய கேம்ஸ்-ம் வைப்பாங்க. அந்த டீச்சரை எல்லா பிள்ளைகளுக்கும் ரொம்ப பிடிக்கும். அன்றைக்கு கேம்ஸ் நேரகிளாஸ் வந்தது. எல்லாருக்கும் ஒரே கொண்டாட்டம். ரோஸ்மேரி டீச்சர் எல்லாருக்கும் பலூன் கொடுத்தாங்க. உங்களுக்கும் பலூன்னா ரொம்ப பிடிக்கும்தானே. பலூனை எல்லோரும் ஊதுங்கன்னு டீச்சர் சொன்னதும் எல்லோரும் ஊதி முடிச்சு போட்டாங்களாம். இப்ப எல்லோரும் உங்க பெயரை பலூன்ல எழுதுங்க என்று சொன்னாங்க. அவரவர் பெயரை ஸ்பீடா எழுதி முடிச்சாங்க.
இப்ப நீங்க என்ன செய்யப் போறீங்க தெரியுமா? ன்னு சொன்னதும் சைலண்டா கவனிச்சாங்க. எல்லோருக்குமே win பண்ணனும்னு ஆசை இருக்கும் இல்லையா? உங்க பலூன்ல இருக்குற முடிச்ச எடுத்துட்டு இந்த table –ல் எல்லாருடைய பலூனையும் போடுங்கன்னு டீச்சர் சொன்னதும், பலூன் புஸ்ன்னு போன மாதிரி
எல்லார் முகமும் புஸ்ன்னு போயிடுச்சி. இப்பத்தான் இன்ட்ரஸ்டிங் ஆக இருக்கப் போகுது. காத்துல பறந்து அங்கங்கே சிதறி கிடக்கிற பலூன்ல உங்க பேர் எழுதியிருக்கிற பலூனை கண்டுபிடித்து எடுங்கன்னு சொன்னதும் வேற பெயர் இருக்குற பலூனை பாத்துட்டு கீழேயே போட்டாங்களாம். டீச்சர் ஒரு ஐடியா கொடுத்தாங்க. மத்தவங்க பெயர் எழுதியிருக்கிற பலூனை எடுத்தா அவங்ககிட்ட கொடுங்க. எல்லாரும் இப்படி செய்யும்போது அவரவர் பலூன் கைக்கு வந்ததாம். சூப்பர் டீச்சர் என்று எல்லா மாணவர்களும் கைதட்டு கொடுத்தார்களாம். மற்றவர்களுக்குத் தேவையானதை நீ செய்தால் உனக்கு தேவையானது கிடைத்து விடும் என்று அருமையான வாழ்க்கைப் பாடத்தை ரோஸ்மேரி டீச்சர் சொல்லிக் கொடுத்தது இன்றைக்கு நமக்கும் பிரயோஜனமாய் இருந்ததல்லவா? ரோஸ்மேரி டீச்சர்-க்காக Thank You ஜீசஸ் சொல்லலாமா? Very good.
என்ன குட்டீஸ்! மற்றவர்களுக்கு உதவி செய்ய ஆசையா இருக்கீங்களா. ஜீசஸ்சும் உங்களுக்கு உதவி செய்ய ரெடியா இருக்காங்க, சந்தோஷம் தானே குட்டீஸ்.
- Sis. தெபொராள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864