Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 11-03.2023
Share:

By Village Missionary Movement

Saturday, 11-Mar-2023

இன்றைய தியானம்(Tamil) 11-03.2023

 

லேசான காரியம்

 

“…கர்த்தாவே பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவி செய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்;..” - 2 நாளா. 14: 11

 

இது பிள்ளைகள் தேர்வுக்கு ஆயத்தமாகிற அல்லது தேர்வு எழுதுகிற காலமாயிருக்கிறது. கொரோனா பயம் இல்லாமல் முழு வருடமும் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று கல்வி கற்று தேர்வு எழுதப் போகிறார்கள். ஆனாலும் பலருக்கு தேர்வு எப்படி இருக்குமோ, நான் பாஸ் ஆகி விடுவேனா? அல்லது பெயில் ஆகி விடுவேனா? அதிக மார்க் எல்லாம் வாங்க முடியுமா? என் உடல்நிலை சரியாக இருக்குமா? என்ற பலவிதமான காரியங்களை மனதில் வைத்து மாணவ மாணவிகள் கலங்கிக் கொண்டிருக்கலாம். நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் மனங்கலங்க வேண்டியதில்லை. எப்படிப்பட்ட மனநிலையில் இருப்பவர்களுக்கும் உதவி செய்யக் கர்த்தர் காத்துக் கொண்டிருக்கிறார். நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையைக் குறித்தும் கர்த்தருக்கு ஒரு நோக்கம் உண்டு. நாம் செய்ய வேண்டியதெல்லாம் “கர்த்தாவே எங்களுக்குத் துணைநில்லும்” என்று ஜெபித்து விட்டு, நம்மால் இயன்ற வரை முயற்சியுடன் படிக்க வேண்டும்.

 

ஆண்டவருக்கு உதவிகள் செய்வது லேசான காரியம் என்பதை ஆசா ராஜாவின் வாழ்க்கையிலிருந்து காண்போம். ஆசா இராஜாவுக்கு விரோதமாய் எத்தியோப்பியாவிலிருந்து சேரா பத்துலட்சம் பேருடன் யுத்தம் செய்ய வந்தார். ஆசா ராஜா கர்த்தரை நோக்கி பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவி செய்கிறது உமக்கு லேசான காரியம். நீர் எங்களுக்குத் துணை நில்லும் என்று ஜெபித்தான். ஆண்டவர் அந்த ஜெபத்திற்கு பதிலாக ஐந்து லட்சத்து எண்பதினாயிரம் வீரர்களைக் கொண்ட ஆசா ராஜாவின் படை, பத்துலட்சம் வீரர்களைக் கொண்ட சேராவின் சேனையை முறியடித்து வெற்றி பெற அனுக்கிரகம் செய்தார்.

 

ஆகவே கண்மணிகளே! நீங்களும் உங்கள் முயற்சிகளோடு ஆண்டவருடைய துணையையும் நாடுங்கள், சிலருக்கு தேர்வுகள் என்றாலே கோலியாத் போலத்தான் தோன்றும். ஆனாலும் அந்த பெரிய கோலியத்தை கூட சிறிய கூழாங்கல்லால் அடித்து வீழ்த்திட தாவீதுக்கு தேவன் கிருபை செய்தாரே. அப்படிப்பட்ட ஆண்டவர் இப்போதும் உங்களோடு தான் இருக்கிறார். கோலியாத் போன்ற தேர்வுகளுக்குப் பயப்படாதீர்கள். நீங்கள் தேர்வில் மட்டுமல்ல உங்கள் வாழ்க்கையிலும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் போராட்டம் தேர்வாக மட்டும் இல்லாமல் கடன் பிரச்சனையாகவோ, நோயாகவோ, வியாபாரத்தில் நஷ்டமாகவோ இருக்கலாம் அல்லது உங்களுக்கு கோர்ட்டில் வழக்குகளோ இருக்கலாம். பலமுள்ளவர்களுக்கு மாத்திரமல்ல, பலமில்லாதவர்களுக்கும் உதவிகள் செய்வது தேவனுக்கு லேசான காரியம். உங்கள் போராட்டத்துடன் கர்த்தரையும் துணையாக கொள்ளுங்கள். நிச்சயம் மிகப்பெரிய வெற்றியைச் சுதந்தரிக்க செய்வார். ஆமென்!

- Mrs. புவனா தனபாலன்

  

ஜெபக்குறிப்பு:

நம் வளாகத்தில் டியூசன் சென்டர் மூலம் சந்திக்கப்படுகின்ற மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al