Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 10-03.2023
Share:

By Village Missionary Movement

Friday, 10-Mar-2023

இன்றைய தியானம்(Tamil) 10-03.2023

 

தாழ்மை

 

“...நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது” - ஏசாயா 53:2

 

ஆப்பிரிக்கா தேசத்தைச் சேர்ந்த சாமுவேல் மோரிஸ் என்ற அர்ப்பணிப்பு உள்ள ஊழியரைக் குறித்து நாம் அறிந்திருக்கலாம். அவர் அநேகப் பாடுகளின் வழியே கடந்து வந்தபடியால் மிகுந்த தாழ்மையைக் கற்றுக் கொண்டவர். அவர் இண்டியானா மாகாணத்திலுள்ள டேலர் பல்கலைக்கழகத்தில் வேதாகமக் கல்லூரியில் படிப்பதற்காக வந்தார். பள்ளியின் தலைவர் அவரிடம் தங்குவதற்கு எந்த அறை வேண்டுமென்று கேட்டபோது, “யாருமே விரும்பாத அறை ஒன்று இருக்குமானால் அதையே எனக்குத் தாருங்கள்” என்று சொன்னாராம். பின்நாட்களில் சம்பவத்தை நினைவுகூர்ந்த அந்தப் பள்ளித் தலைவர் “சாமுவேல் அப்படிச் சொன்னபோது என் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலாமல் நான் என் முகத்தை வேறுபக்கமாய்த் திருப்பிக் கொண்டேன். யாருமே விரும்பாத ஒன்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்” என்று கூறினார்.

 

யாரும் விரும்பக்கூடிய நபராக நான் இல்லாமல் இருந்தால் நான் அதை ஏற்றுக் கொள்வேனோ? இந்த சமுதாயத்தில் நான் வாழ முடியுமா? என்று பல கேள்விகள் நம்முள்ளத்தில் எழும்பலாம்! யாருமே விரும்பாத இடம், யாருமே விரும்பாத ஒன்று, யாருமே விரும்பாத நபர் பொதுவாக நாம் இவற்றை விரும்புவதில்லை. ஆனால் நம் மூத்த சகோதரனாகிய இயேசுகிறிஸ்துவுக்கு கூட யாருமே விரும்பாத ரூபம் இருந்தது என்று வேதம் கூறுகிறது. கிறிஸ்துவின் சிந்தையோடு நாமும் இப்படிப்பட்ட சூழ்நிலையையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தாழ்மையுள்ளவர்களாய் மாற வேண்டும். இதைத்தான் இயேசு கிறிஸ்து வாழ்ந்து காண்பித்திருக்கிறார்.

 

பணம், புகழ், அந்தஸ்து, படிப்பு, அழகு இது உலகம் நம்மிடம் எதிர்பார்ப்பது! ஆனால் ஆண்டவர் எதிர்பார்ப்பது மனத்தாழ்மை, மனவுண்மை, எளிமையாக வாழ்வதுதான்! இயேசு கிறிஸ்துவே சிலுவையில் மரண பரியந்தம் தன்னைத் தாழ்த்தும்போது நீங்களும் நானும் எம்மாத்திரம்?

 

சிந்தனைக்கு: மற்றவர்கள் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொண்டிருக்கையில், நானோ கிறிஸ்துவின் சிலுவை அடிவாரத்தில் தாழ்மையோடு விழுந்து என்னுடைய இரட்சிப்பை எண்ணி அதிசயத்துக் கொண்டிருக்கிறேன். 

- Mrs. பேபி காமராஜ்

 

ஜெபக்குறிப்பு: 

நாம் அனுப்பும் ஜெபக்குறிப்புகளுக்கு பரிந்து பேசி ஜெபிக்கின்ற “எஸ்தர்கள்” எல்லா பணித்தளங்களிலும் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al