By Village Missionary Movement
Thursday, 09-Mar-2023இன்றைய தியானம்(Tamil) 09-03.2023
சிறந்த தியாகம்
“தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடே கூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” - ரோமர் 8:32
ரோம எழுத்தாளர் பிளேமி எல்டர் என்பவர் 99 அடி உயரமுள்ள ஒரு கல் ஸ்துதியை ஸ்தாபித்த விதத்தை எழுதியுள்ளார். மிக கனமான கல்தூணை உயர்த்த அதின் ஸ்தானத்தில் நிறுத்த 20 ஆயிரம் ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். இது மிகவும் கவனமாக, பொறுப்புடனும் செய்யப்பட வேண்டிய வேலை. இதில் ஏதாவது கவனக்குறைவு ஏற்பட்டால் அந்த கல் ஸ்துதி உடைந்துவிடும். இதற்காக பல ஆண்டுகள் எடுத்த பிரயாசம் வீணாகிவிடும் என நினைத்த அந்த நாட்டு மன்னர் இந்த வேலையை கவனிக்கும் இன்ஜினியர் கவனக்குறைவில்லாமல் சரியாக வேலை செய்ய வேண்டுமானால் அவரின் மகனை அந்த கல்தூணின் உச்சியில் கட்டிவிட்டால் தன் மகனை பாதுகாக்கும் நோக்கத்தில் கவனமாக இந்த வேலையை செய்து முடிப்பார் என்றார். அதேபோல் இன்ஜினியரின் மகனை தூணின் உச்சியில் கட்டினர். அவரோ தன் மகன் கீழே விழுந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் மிகக் கவனமாக அந்த வேலையை செய்து முடித்தார். ஆனால் பிதாவாகிய தேவனோ தன்னுடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல் நமக்காக அவரை பலியாக ஒப்புகொடுத்தார்.
இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைந்து உயர நிறுத்தின போதிலும் பிதாவானவர் அவரை பாதுகாக்க நினைக்கவில்லை. சர்வலோகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்க வேண்டும் என நினைத்து தமது முகத்தை மறைத்துக் கொண்டார். நமக்காக இயேசு சிலுவையில் பலியானார். பிதா தம்முடைய சொந்தக் குமாரனை நேசித்ததை விட நம்மை நேசித்தார். அதனால்தான் இவ்வளவு பெரிய தியாகத்தை செய்தார், மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன். ஆதலால் பிதாவானவர் இயேசு கிறிஸ்துவை நமக்காக சாபமாக்கினார்.
ஆம், பிரியமானவர்களே, அந்த இயேசுவை நம் உள்ளத்தில் ஏற்றுக் கொள்வோம்.
தம்முடைய சொந்தக் குமாரனை நமக்காக தந்தவர் அவரோடு கூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு நிச்சயமாய் தருவார். நமக்காக தன்னையே தியாகம் செய்த இயேசுவுக்காக நாம் என்ன செய்யப் போகிறோம்? உனக்காக நான் மரித்தேனே! எனக்காக நீ என்ன செய்தாய்? என்று சிலுவையில் தொங்கியவராய் நம்மோடு இடைபடுகிறார். இதை வாசிக்கின்ற உங்களுடைய தியாகம் தான் என்ன?
- Mrs. நிரோஷா ஆல்வின்
ஜெபக்குறிப்பு:
நமது வளாகத்தில் நடைபெறும் கட்டிடப்பணிகளுக்கு தேவையான பொருளாதார உதவிகள் கிடைக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864