Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 08-03.2023
Share:

By Village Missionary Movement

Wednesday, 08-Mar-2023

இன்றைய தியானம்(Tamil) 08-03.2023

 

பெண்ணுக்கு நிகர் பெண்ணே!

 

“குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.” - நீதிமொழிகள் 31 :10 

 

மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல என்று ஆண்டவர் அவனுக்கு ஏற்றத் துணையாக பெண்ணைப் படைத்தார். தாயாய், மனைவியாய், சகோதரியாய், மகளாய், பேத்தியாய் என பல உறவுகளாக தேவன் அருளிய மிகப்பெரிய உன்னதமான அருட்கொடை தான் பெண்கள்.

 

தேவனால் தனித்தன்மையுள்ளவர்களாய் படைக்கப்பட்ட பெண்ணினம் “நாட்டின் கண்கள்” எனப் போற்றப்படுகின்றனர். பற்பல துறைகளிலும் பெண்கள் இந்நாட்களில் சிறந்து விளங்கி வருகின்றனர்.

 

நாம் எத்தனையோ சாதனைப் பெண்களையும் மிஷனெரிப் பெண்களையும் அறிவோம். நம் இன்றைய வேதபகுதியில் காணப்படுகிற அபிகாயில் என்ற பெண்ணைப் பற்றி அறிவோம். அபிகாயில் என்றால் மகிழ்ச்சிக்குரியவர் என்று பொருள். ஆனால் இவளுக்கு வாய்த்த கணவர் நாபாலோ மிகவும் கோபக்காரன் முரடன், குடிகாரன், பணக்காரனும் கூட. இந்தப் பெண்ணோ மகா புத்திசாலி என 3ம் வசனம் குறிப்பிடுகிறது. எனவே நாபாலுக்கு நேர் எதிரான குணமுடைய நற்குணசாலியாக காணப்பட்டாள்.

  

ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கும் நாளிலே மனிதர்களுக்கு விருந்து படைப்பதும் வெகுமதி அளிப்பதும் வழக்கமாயிருந்தது. வனாந்தரத்திலிருந்த தாவீது மயிர்கத்திரிக்க வந்திருப்பதை அறிந்து 10 வாலிபர்களை அனுப்பி அவனுக்கு வாழ்த்துதல் சொல்லியும், உதவி கேட்டும் இருந்தார். ஆனால் நாபால் தன் பொல்லாத சுபாவப்படி அவர்களை அவமதித்து வெறுமனே அனுப்பிவிட்டான். தாவீது மிகவும் கோபமடைந்து நாபாலை எதிர்கொள்ள தீர்மானித்ததை அறிந்து அபிகாயில் தீவிரமாக துணிவுடன் வெகுமதிகளுடன் தாவீதையும் அவன் ஆட்களையும் சந்திக்கச் சென்றாள். தாவீதைக் கண்டு தரையில் முகங்குப்புற விழுந்து மன்னிப்பு கேட்கிறாள்.( வசனம் 28) பொல்லாப்பும், உயிர் சேதமும் ஏற்படுவது நல்லதல்ல என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறாள். ( வச. 31) அபிகாயிலின் தாழ்மையும், சாதுரியமான நற்சொற்களும் தாவீதின் உள்ளத்தைத் தொட்டது. ஆசீர்வாதமும், சமாதானமும் பெற்றவளாய் திரும்பினாள் (வசனம் 35)

 

எனக்கன்பானவர்களே, அபிகாயிலைப்போல நாமும் நமது வீட்டிலும், பணிபுரியுமிடத்திலும் எல்லோரிடமும் ஒத்துப்போகும் மனப்பான்மையுடன் நிதானம், துணிவு, தாழ்மை, சாதுரியத்துடன் கூடிய நல்வார்த்தைகளுடன் தேவனை மகிமைப்படுத்தி மகிழ்ச்சியுடன் வாழுவோம். பெண்ணுக்கு நிகர் பெண்ணே! அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!

- Mrs. சரோஜா மோகன்தாஸ் 

 

ஜெபக்குறிப்பு

மோட்சப் பயணம் மற்றும் நமது அனைத்து பத்திரிகை ஊழியங்களிலும் தேவகரம் உடனிருக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al