Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 07-03.2023
Share:

By Village Missionary Movement

Tuesday, 07-Mar-2023

இன்றைய தியானம்(Tamil) 07-03.2023

 

வீண் பக்தி

 

“அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை” - 1 யோவான் 3:5

 

பக்தி நிறைந்த தகப்பனார் ஒருவர் இறந்து பல ஆண்டுகள் கடந்து போனது. அவருடைய மகனுக்கு தகப்பனாரை நினைத்தாலே கண்ணீர் வந்துவிடும். எப்போதும் தன்னுடைய தகப்பனாரைக் குறித்து புகழ்ந்து பேசுவார். தன்னுடைய 

தந்தை உபயோகித்து வந்த பழைய பைக் ஒன்றை மிகப்பெரிய பொக்கிஷமாக எண்ணி இன்று வரை பராமரித்து வருகின்றார். தன்னுடைய தந்தை எவ்வளவாய் கஷ்டங்களையும் துன்பத்தையும் ஏற்றுக்கொண்டு தங்களை வளர்த்தார் என்பதை கதை கதையாய் சொல்லுவார். ஆனால், வேலை எதுவுமின்றி தந்தை கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை கரைத்துக் கொண்டு வாழ்கின்றவர். இவரிடம் கெட்ட பழக்கங்களும் உண்டு. ஆனால், இவருடைய தகப்பனாரிடம் காணப்பட்ட ஒரு நல்ல குணம் சிறிதளவு கூட இந்த மகனிடம் காணப்படவில்லை. தகப்பனாரின் கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கையை பக்தியோடு நினைவுகூரும் இவர், அவ்விதம் கஷ்டப்பட்டு வளர்த்தது எதற்காக என்பதை நினைக்கவில்லை.

 

ஆண்டவராகிய இயேசு, நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டார் (1யோவான் 3:5) என்பதை மறந்துவிட்டு நாம் இயேசுவின் பாடு மரணங்களை நினைத்து மனதுருகுகிறோம். கண்ணீர் சிந்திக் கொண்டே பிரசங்கமும் கேட்கிறோம். லெந்து காலத்தில் இயேசுவானவர் பட்ட பாடுகளை எல்லாம் கதை கதையாய் பேசுவதிலும், கவலை நிறைந்த முகத்தோடு கேட்பதிலும் அதிக கவனம் செலுத்துகிறோம். சிலுவை அடையாளங்கள் இந்த நாட்களில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

 

லெந்து நாட்களை அநுசரித்துக் கொண்டிருக்கிற நாம், இயேசு எதற்காகப் பாடு அனுபவித்தார்? எதற்காக சிலுவையில் அறையப்பட்டார்? எதற்காக அவமானங்களைச் சகித்தார்? இவற்றையெல்லாம் எண்ணி, மன வியாகுலத்தோடு பக்தியை வெளிப்படுத்துகிறோமா? நாம் பாவ மன்னிப்பை பெறவும், பாவத்திலிருந்து விடுதலை பெறவும் இயேசு சிலுவையில் பாடுகளை சகித்தார். நாம் தேவனுடைய பிள்ளைகளாக மாறி, பரிசுத்தமாய் வாழ்வதற்காகவே அவர் இரத்தம் சிந்தினார். இயேசுவின் குணாதிசயங்கள் நம்மில் காணப்படவே அவர் அகோரமான பாடுகளை ஏற்றுக்கொண்டார் இதையெல்லாம் நாம் சிந்தித்து, உண்மையான மனந்திரும்புதலைக் கண்டு, உயர்ந்த வாழ்க்கை வாழாவிட்டால் லெந்துகால பக்தி வீண்பக்தி தானே.

- Mrs. சக்தி சங்கர்ராஜ்

 

ஜெபக்குறிப்பு:

ஆமென் கிராமிய டிவியில் பணிபுரிய அர்ப்பணிக்கப்பட்ட டெக்னீசியன்கள் கிடைக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al padişahbet padişahbet giriş casibom giriş bets10 extrabet royalbet süperbetin jojobet casibom holiganbet galabet matbet matbet giriş hilbet bahiscasino celtabet antikbet betoffice