Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 06-03.2023
Share:

By Village Missionary Movement

Sunday, 05-Mar-2023

இன்றைய தியானம்(Tamil) 06-03.2023

 

முழங்கால் ஜெபம்

 

“…அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம் பண்ணி ஸ்தோத்திரம் செலுத்தினான்” - தானி. 6:10

 

ஒரு மிஷனெரி நிறுவனமானது மிஷனெரி ஒருவரை குறிப்பிட்ட பட்டணத்திற்கு ஊழியம் செய்ய அனுப்பியது. உற்சாகமாக சென்று அவர் பட்டணத்தை சுற்றிப் பார்த்தார். ஓரிரு நாட்களில் ஊழியத்தை ஆரம்பித்தார். மாதங்கள் பல உருண்டோடின. எவரும் இவரது போதனைக்கு செவி சாய்க்கவில்லை. மக்கள் மிகவும் முரட்டாட்டம் மிக்கவர்களாய் மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தனர். தினமும் இடைவிடாமல் ஊழியம் செய்தும் ஒரு சிலரை கூட மாற்ற முடியவில்லை. எனவே மிகவும் சோர்வுற்றவராக எனது எல்லா முயற்சியும் பயனற்றுப் போய் விட்டதே என்று நினைத்தவராக பட்டணத்தின் இன்னொரு பகுதிக்கு வந்தார்.

 

அங்குள்ள சாலை அருகில் கல் உடைக்கும் ஒருவரை பார்த்தார். பெரிய பெரிய கற்களை அவர் சம்பட்டியால் உடைத்துக் கொண்டிருந்தார். ஊழியர் அவரிடம் சென்று “ஐயா, உங்களால் எப்படி இவ்வளவு பெரிய கடினமான பாறைகளை உடைக்க முடிகிறது?” என்று கேட்டார். அதற்கு கல் உடைப்பவர் “ஐயா கடினமான பாறை உடைக்கும் போது முழங்காலில் நின்று உடைக்க வேண்டும். முழங்காலில் நிற்கும் போது நமது வல்லமை அதிகரிக்கும். எப்படிப்பட்ட கடினமான பாறையையும் உடைத்து விடலாம்” என்றார். அவர் மூலம் தேவன் தன்னோடு பேசுவதை ஊழியர் ஒரு நொடிப் பொழுதில் புரிந்து கொண்டார். உள்ளத்தில் உற்சாகம் அடைந்தவராக வீடு திரும்பினார். அன்றிலிருந்து பல மணி நேரம் முழங்காலில் இருந்து ஜெபித்து வெற்றி பெற்றார்.

  

வேதத்திலும் முழங்காலில் நின்று ஜெயம் பெற்ற ஒரு தேவ மனிதரை நாம் அறிவோம். அவர்தான் தானியல். இந்த தானியலுக்கு விரோதமாக பத்திரத்தில் கையெழுத்திட்ட போதிலும் அங்கே தான் முன் செய்து வந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம் பண்ணி ஸ்தோத்திரம் செலுத்தினான். தானியேலின் முழங்கால் ஜெபம் சிங்க கெபியிலிருந்து அவரைப் பாதுகாத்தது. இவரின் முழங்கால் ஜெபம் சிங்கங்களின் வாயை கட்டிப் போட வைத்தது. தானியேலின் வெற்றி அவருடைய முழங்கால் ஜெபமாகவே இருந்தது. ஆம், முழங்காலில் நிற்பதுதான் வெற்றியின் ரகசியம்! வேதத்திலே எலியா, பவுல், எஸ்தர் இவர்களெல்லாரும் ஜெபித்து வெற்றி கண்டனர். நாமும் முழங்காலில் நின்று இருதயத்தை ஊற்றும் போது, மிகுந்த பெலனை பெற முடியும். ஏனென்றால் நம்முடைய முயற்சிகள் தோற்றுப் போகலாம். ஆனால் முழங்கால் ஜெபம் ஒருபோதும் தோற்பதில்லை. அதே போலவே, நம்முடைய முழங்கால் தேய்ந்து கருப்பாக மாற மாற நம்முடைய முகம் பிரகாசிக்கும். முழங்கால் ஜெபம் பல தடைக் கற்களை தகர்த்து வெற்றி பெறச் செய்யும்.

- T. சங்கர் ராஜ்

  

ஜெபக்குறிப்பு:

நமது மீடியா ஊழியத்தின் மூலம் திரளான ஆத்தும அறுவடை காணப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al