Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 05-03.2023 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 05-Mar-2023

இன்றைய தியானம்(Tamil) 05-03.2023 (Kids Special)

 

நேரத்தை வீணாக்காதே

 

“மனுஷகுமாரன் (இயேசு கிறிஸ்து) வரும் நாளையாவது, நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்” - மத்தேயு 25:13

 

அது ஒரு அழகிய பூஞ்சோலை. அங்கு நிறைய மரங்கள், பூச்செடிகள் என்று பார்ப்பதற்கே அழகாக இருந்தது. அதிலும் அந்த மரங்களில் கூடுகட்டி வசித்து வந்த பறவைகளைப் பார்த்தால் இன்னும் ரசித்துக்கொண்டே இருக்கணும் போலிருக்கும். அதில் ஒரு பறவை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மற்ற எல்லாப் பறவைகளையும் வழிநடத்திக் கொண்டு வந்தது.

 

ஒரு நாள் இந்த தலைமை பறவை உள்ளத்தில் ஒரு ஆசை வந்தது, இங்கு உள்ள எல்லாப் பறவைகளிலும் சிறந்த விழிப்புள்ள பறவை எது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதற்கான போட்டி ஒன்றை அறிவித்தது. போட்டி என்னவென்றால் எல்லாப் பறவைகளும் தங்கள் கூட்டை அலங்கரிக்க வேண்டும். எந்தக் கூடு அழகாக இருக்கிறதோ அதில் அந்த தலைவர் பறவை வந்து தங்கும். நிறைய பரிசுப் பொருட்களும் கிடைக்கும் என்றது.

 

இதைக் கேட்ட எல்லா பறவைகளுக்கும் மிகுந்த சந்தோஷம். தலைவர் நம் கூட்டில் வந்து தங்கினால் எவ்வளவு பெருமை என்று எண்ணிப் பறவைகள் எல்லாம் பொருட்களை சேகரிக்க பறந்து சென்றது. கலர் பேப்பர், அழகான மணிகள், முத்து இப்படி விதவிதமான பொருட்களை கொண்டு வந்து தங்கள் கூடுகளை அலங்கரித்தது. அங்கே ரேமா என்ற காக்காவும் இருந்தது. அது எல்லோரையும் விட அதிகமான பொருட்களை சேகரித்து வைத்திருந்தது. ரேமா நினைத்தது இந்த பொருட்களையெல்லாம் வைத்து அலங்கரித்தால் என் கூடு எவ்வளவு அழகாக இருக்கும். நிச்சயம் என் வீட்டில் தான் தலைவர் தங்குவார் என்ற நம்பிக்கையோடும் மிகுந்த சந்தோஷத்தோடும் தூங்கியது. அடுத்த நாள் காலை எழுந்தவுடன் இன்றும் கொஞ்சம் பொருட்களை சேர்த்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி பறந்து சென்று நிறைய பொருட்களைக் கொண்டு சாயங்காலம் கூடு வந்து சேர்ந்தது. தான் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் பார்த்து சந்தோஷப்பட்டு சோர்வாக இருந்ததால் நாளை அலங்கரித்துக் கொள்ளலாம் என தூங்கிவிட்டது. அதிகாலை ரேமா கண்விழித்தபோது அங்கு தலைவர் பறவையும் வேறு சில பறவைகளும் கூட்டை பார்வையிட வந்தன. கூடு அலங்கரிக்கப்படாமல் இருப்பதைப் பார்த்து வேறு கூட்டிற்கு போய் விட்டன. ரேமா ஓவென அழத்தொடங்கியது. இனி அழுது என்ன பிரயோஜனம்? எல்லாவற்றையும் சேர்த்தும் கூட்டை அலங்கரிக்காமல் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று நாளை தள்ளிப் போட்டதால் எல்லாம் வீணாகிப் போனதே, தலைவர் என் வீட்டில் தங்க முடியாமல் போய்விட்டதே என்று புலம்பியது.

 

தம்பி தங்கச்சி, இதுபோலத்தான் நாமும் நமது சரீரமாகிய ஆலயத்தை அலங்கரிக்க ஜெபமும் வேதவாசிப்பும் மிகவும் முக்கியம். நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று நாட்களை தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தால், நம் இருதயத்தில் இயேசப்பா வாசம் பண்ண முடியாது, இயேசப்பா வரும்போது கைவிடப்பட்டவர்களாய் காணப்பட்டுவிடுவாய். எனவே இன்றையிலிருந்து ஜெபம் பண்ணி வேதம் வாசித்து இருதயத்தை பரிசுத்தமாக்கி இயேசப்பா வந்து தங்குவதற்கு இன்றே இடம் கொடு Ok வா.

- Mrs. சாராள் சுபாஷ்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al