By Village Missionary Movement
Friday, 03-Mar-2023இன்றைய தியானம்(Tamil) 04-03.2023
அபாய விளக்கை ஆட்டினான்- ஆனால்
“மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக” - எசேக்கியேல் 3: 17
இரயில் செல்லும் இருப்புப்பாதையை ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குக் கடந்து செல்ல லெவல் கிராசிங் கதவுகள் உள்ளன. இங்கு இரயில்வே கேட் காவலர்கள் உள்ளனர். ஏதாவது அபாயம் என்றால் பகலில் சிவப்பு கொடியையும், இரவில் சிவப்பு விளக்கையும் காட்டி எச்சரிப்பார்கள்.
இவ்வாறு ஒரு லெவல் கிராசிங்கில் ஒரு முறை ஒரு பெரிய விபத்து நடந்து, அநேகர் மரித்தனர். எனவே, விசாரணை நடைபெற்றது, காவலர் அழைக்கப்பட்டார். நீதிபதி, விபத்து நடந்த போது காவலர் அந்த இடத்தில் இருந்தாரா? என்றும், சிவப்பு விளக்கை முறைப்படி ஆட்டிக்கொண்டிருந்தாரா? என்றும் பல கேள்விகளைக் கேட்டு விசாரித்தார். எப்படி கேள்வி கேட்டாலும், “நான் அந்த இடத்தில் தான் இருந்தேன். முறைப்படி விளக்கை ஆட்டிக் கொண்டிருந்தேன்” என்றார் காவலர். நெடுநாட்களுக்குப் பின் விசாரணை முடிந்தது.
சில நாள் சென்றபின் இந்த விபத்தை பற்றி பேசும்போது அந்த காவலர், தன் நண்பனிடம் “நீ விளக்கை ஆட்டினாயே, அப்போது அந்த விளக்கு எரிந்து கொண்டு இருந்ததா? என்று நீதிபதி கேட்டால் என்ன பதில் சொல்வது! என்று பயந்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை” என்றான்.
காவல்காரர் சிவப்பு விளக்கை முறைப்படி ஆட்டினார்! ஆனால் அதில் அவசியமான எச்சரிக்கும் சிவப்பு வெளிச்சம் இல்லை, அது வெறும் விளக்கு, வெளிச்சம் இல்லாத விளக்கு. எனவே தான் அந்த விபத்து நடந்தது!!
தேசத்தின் காவலாளிகளே! கர்த்தருடைய ஜனமே, தேவ ஊழியர்களே, நம்முடைய ஜீவியம் எரிந்து பிரகாசிக்கும் விளக்கைப் போல் இருக்கிறதா? அல்லது அந்தக் காவல்காரருடைய விளக்கைப் போல் பிரகாசம் இல்லாமல் இருக்கிறதா? நம் ஊழியம் “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்” என்னும் நற்செய்தி இல்லாத ஊழியமா? அந்த காவல்காரர் சிவப்பு வெளிச்சம் இல்லாத விளக்கை ஆட்டினது போல, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் உண்டான பாவமன்னிப்பை பிரஸ்தாபப்படுத்தாத போலி இரட்சிப்பின் செய்தியை அறிவிக்கும் தேவ ஊழியமா?
இன்றே சிந்திப்போம்! சீர் செய்வோம்! தேவ இராஜ்ஜியத்தின் ஊழியத்தை உண்மையாய் செய்வோம்! சிறந்த காவல்காரன் என்று தேவன் நம்மை பாராட்டுவார்! என்ன ஆனந்தம்!
- S. பேர்லின் செல்லபாய்
ஜெபக்குறிப்பு:
சுவிசேஷ கைப்பிரதிகள் உடனடியாக ஒரு லட்சம் வரை அச்சடிக்கப்பட வேண்டியுள்ளது இதற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864