Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 03-03.2023
Share:

By Village Missionary Movement

Thursday, 02-Mar-2023

இன்றைய தியானம்(Tamil) 03-03.2023

 

ஜீவனைக் கொடுக்கும் அன்பு

 

“ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” - யோவான் 15:13

 

1872ல் பிறந்த ஜான் ஹார்ப்பர் பேக் தனது 13 வயதில் கர்த்தரை ஏற்றுக் கொண்டார். அவருக்கு திருமணமாகி, 4 வருடங்களுக்குள் மனைவி மரித்துப் போனார்கள். அவர்களுக்கு நீனா என்ற பெண் பிள்ளை இருந்தது. தேவனுடைய ஊழியத்தை செய்து கொண்டிருந்த ஹார்ப்பர், மூடி பிரசங்கியாரின் ஆலயத்தில் பிரசங்கிப்பதற்காக சிகாகோவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அதற்காக 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி அவரும் அவளுடைய மகளும் டைட்டானிக் கப்பலில் ஏறினார்கள் . எதிர்பாராத விதமாக, பனிமலையின்

மீது மோதி கப்பல் மூழ்க ஆரம்பித்த போது அவர் தனது மகளை உயிர் காக்கும் படகில் ஏற்றிவிட்டு, “நான் உன்னை ஒருநாள் காண்பேன்” என்று சொல்லி அனுப்பி வைத்தார். அவரும் படகில் போக இடமிருந்தாலும் அவர் மற்றவர்களை ஏற்றி விட்டார். பின் மரண பயத்தோடு இருந்த மக்களிடம் வந்து, “பெண்களும், சிறுபிள்ளைகளும், இரட்சிக்கப்படாதவர்களும் முதலில் உயிர் காக்கும் படகில் ஏறுங்கள்” என்று அவர் கூறிக்கொண்டு இருக்கும்போது கப்பல் மூழ்க ஆரம்பித்தது. கப்பலில் இருந்து பயணிகள் கீழே ஐஸ் தண்ணீரில் குதிக்க ஆரம்பித்தார்கள். அதில் ஹார்ப்பரும் ஒருவராவார். 

 

அந்த நடுங்கும் குளிரிலும் ஹார்ப்பர், மக்கள் அந்த குளிரில் உறைந்து மரிக்கும் முன்னே, அவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்த ஆரம்பித்தார். அப்பொழுது ஒரு இளம் வாலிபன் அங்கிருந்த ஒரு கட்டையின் மேல் ஏறி தப்பும் படி போராடிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவனிடம் “நீ இரட்சிக்கப்பட்டாயா?” என்று கேட்டார். அவன், “இல்லை” என்று கூறினான். உடனே தன் மேலே இருந்த Life jacket-ஐ எடுத்து, அந்த வாலிபனுக்குக் கொடுத்து “என்னை விட உனக்குத் தான் அது தேவை” என்று கூறிவிட்டு, அவனுக்கு சத்தியத்தை சொல்லி கிறிஸ்துவுக்குள் வழிநடத்தினார். கப்பலில் இருந்த 1528 பேரில் ஆறு பேரே காப்பாற்றப்பட்டனர். அதில் அந்த வாலிபனும் ஒருவன். நான்கு வருடங்கள் கழித்து, அந்த ஆறு பேரையும் சேர்த்து நடத்தின கூட்டத்தில் அந்த வாலிபன் கண்ணீரோடு எழுந்து நின்று தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் ஹார்ப்பர் எப்படி அந்தப் பனிநீரிலும், மற்றவர்களுக்கு சுவிசேஷத்தைக் கூறினார் என்பதையும், அவர் நீந்த முடியாமல் கடைசியில் பலவீனமடைந்து, தண்ணீரில் மூழ்கும் நேரம் வந்தபோது “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள், அப்போது நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்” என்று கூறிக்கொண்டே மூழ்கியதையும் நினைவுகூர்ந்து கண்ணீர் வடித்தான். இந்த அற்புத மனிதரின் செயலை ஹாலிவுட் படமாக எடுக்காமலிருக்கலாம், ஆனால், பரலோகத்தில் அவருக்கு நிச்சயம் பதில் செய்யப்படும்.

 

இயேசு கிறிஸ்துவும் நம்மில் அன்பு கூர்ந்து, தமது ஜீவனையே நமக்காகக் கொடுத்தாரே, தேவனுடைய குமாரனாயிருந்தும், நமக்காக தன் ஜீவனைக் கொடுத்து, தம் மாசில்லாத இரத்தத்தை சிந்தி, நமக்கு இரட்சிப்பை இலவசமாக கொடுத்திருக்கிறாரே அவர், என்றென்றும் சூப்பர் ஹீரோ தான். அவரை விசுவாசித்து அவருக்காக எந்த தியாகமும் செய்யும் ஒவ்வொருவரும் ஒரு ஹீரோக்கள்தான்.

- Bro. பாக்கியநாதன்

 

ஜெபக்குறிப்பு:

ஆந்திராவில் நடைபெறும் ஆலயக் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான பொருளாதார உதவிகள் கிடைக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler online casino online casino Piabet Piabet Giriş Ngsbahis Ngsbahis Giriş İnterbahis İnterbahis Giriş Klasbahis Klasbahis Giriş Coinbar Coinbar Giriş Limanbet Limanbet Giriş İmajbet İmajbet Giriş Restbet Restbet Giriş Matbet Matbet Giriş Jasminbet Jasminbet Giriş Belugabahis Belugabahis Giriş Online casino nz Best payout online casino nz jojobet jojobet giriş jojobet güncel giriş meritking meritking giriş meritking güncel giriş perabet perabet giriş perabet güncel giriş holiganbet holiganbet giriş holiganbet güncel giriş Meritking Perabet Holiganbet jojobet jojobet giriş jojobet güncel giriş bahsegel bahsegel bahsegel bahsegel bahsegel perabet perabet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş holiganbet holiganbet giriş belugabahis matbet romabet alobet alobet giriş bahissenin bahissenin giriş bayconticasino bayconticasino giriş atlasbet atlasbet giriş betcio betcio giriş grandpashabet grandpashabet giriş marsbahis marsbahis giriş matbet matbet giriş nakitbahis nakitbahis giriş pashagaming pashagaming giriş Meritking Meritking giriş imajbet imajbet giriş İmajbet Prizmabet Yakabet Betsat Betnano Restbet Perabet Perabet Giriş Perabet Güncel Giriş Cratosroyalbet