By Village Missionary Movement
Thursday, 02-Mar-2023இன்றைய தியானம்(Tamil) 02-03.2023
கிறிஸ்துவுக்கு அடிமை
“குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே” - 1 பேதுரு1:19
அடிமை வியாபாரம் அதிகமாக நடைபெறும் காலத்தில் ஓர் ஆங்கிலேய வியாபாரி அடிமைகளை ஏற்றிச் செல்லும் ஓர் கப்பலில் பயணித்தார். ஒருநாள் ஓர் குறிப்பிட்ட அடிமையை அவர் காண நேர்ந்தது. அவனைப் பற்றி அறிய அறிய அவருக்கு அந்த அடிமைமேல் மிகுந்த இரக்கமும், அன்பும் ஏற்பட்டது. அந்த அடிமையின் விலையை, அடிமைகளை விற்கும் வியாபாரியிடம் கேட்டபோது, அவனது விலை அவரது கப்பற்பிரயாணத்திற்கான கட்டணத்தைவிட அதிகமாக இருந்தது. ஆனாலும் கூட, அவர் அந்த விலையைக் கொடுத்து அந்த அடிமையை வாங்கிக் கொண்டார். அவரிடம் அடிமையாயிருக்கத் தன்னை வாங்கிக் கொண்டார் என்று தவறாக நினைத்த அந்த அடிமை, அவரை மிகுந்த உள்ளக்கசப்புடனும், வேதனையுடனும் அவரை சபித்துத் திட்டினான். ஆனால் அந்த ஆங்கிலேய வியாபாரியோ மிகுந்த அன்புடன், “மகனே உன்னை அதிக விலை கொடுத்து வாங்கியதே உன்னை இலவசமாக விடுதலையாக்கவே” என்று கூறினார். பிரமிப்பும் சொல்லொண்ணா மகிழ்ச்சியும் அடைந்த அந்த அடிமை, “ஐயா, நீங்கள் என் இருதயத்தை சிறையாக்கிக் கொண்டீர்கள் இனி என் வாழ்நாள் முழுவதும் உமக்கே அடிமையாகி, உமக்கே சேவை செய்வேன்” என்று கூறி அவரது கால்களில் விழுந்து கண்ணீர் சிந்தினான்.
இந்த லெந்து நாட்களில் நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். நம்மை பிசாசு, பாவம், சாபம், நரகம் ஆகியவற்றிலிருந்து இலவசமாக விடுதலை ஆக்க, தன் சொந்த ரத்தத்தை சிந்தி ஜீவனைக் கொடுத்த இயேசு இரட்சகரின் அழைப்பை, அவரது அன்பை அறியாது எத்தனை முறை இருந்தோம்? இனி நான் உமக்கே அடிமை என்று கூறி, நாம் நம் ஆவி, ஆத்மா, சரீரத்தை அவருக்கு அர்ப்பணிப்பதை தவிர, வேறு எப்படி அவரது அழைப்பை அன்பை ஏற்றுக் கொள்வது?
ஒரு அடிமை சுயசித்தம் செய்ய முடியாது. எஜமானின் சித்தம் தான் செய்ய முடியும். இவ்வாறு தன் சுயத்தை வெறுத்து, பாடுகளை சகிக்க வேண்டும் தன் வாழ்நாள் முழுவதும் தன் எஜமானையே சேவிக்க வேண்டும். நாமும் கிறிஸ்துவின் அடிமைகளாக அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, அவர் சித்தம் செய்யவும், சுயத்தை வெறுக்கவும், பாடுகளைச் சகிக்கவும், தம் வாழ்நாள் முழுவதும் அவரையே சேவிக்கவும் நம்மை இந்த லெந்து நாட்களில் அர்ப்பணிக்கக் கிருபை செய்வாராக!
- Mrs. கீதா ரிச்சர்ட்
ஜெபக்குறிப்பு:
நம்முடைய ஊழியர்களின் பிரயாணங்களில் தேவன் பாதுகாப்பைக் கட்டளையிட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864