Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 26-02.2023 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 26-Feb-2023

இன்றைய தியானம்(Tamil) 26-02.2023 (Kids Special)

 

ரீனாவும் –ஆட்டுக்குட்டியும்

 

“நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது: அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்” - சங்கீதம் 119:71

 

Hello குட்டீஸ் நீங்க யார் மேல, எந்தப் பொருட்கள் மேல அன்பாயிருக்குறீங்க? சிலருக்கு பூனைக்குட்டி, சிலருக்கு நாய்க்குட்டி இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும். ஆனால் இந்த கதையில வருகிற ரீனாவுக்கு என்ன பிடிக்குமென்று பார்ப்போமா?

 

ரீனா நன்றாகப் படிக்கக்கூடிய தேவனுக்குப் பயந்த பிள்ளை. எதைச் செய்தாலும் ஜெபிக்காமல் செய்யமாட்டாள். பெற்றோருக்கும் நன்கு கீழ்ப்படியக்கூடியவள். இவள் பெற்றோர் ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கி வீட்டில் வளர்த்தார்கள். ரீனாவுக்கு அந்த ஆட்டுக்குட்டி மீது அதிக பிரியம். ஆசையாய் வளர்த்தாள். குடும்ப ஜெபம் வைக்கும் போதும் தூங்கும்போதும் கூட தன் அருகிலேயே வைத்துக் கொள்வாள். ஆட்டுக்குட்டி மீது வைத்த பிரியத்தில் ஜெபத்தை, வேதம் வாசிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து விட்டாள். பெற்றோர்கள் எவ்வளவு திட்டியும் கேட்கவில்லை. நாட்கள் கடந்தன. ரீனாவும் பெரியவளாகி காலேஜுக்கு செல்ல ஆரம்பித்தாள். ஆட்டுக்குட்டியும் பெரிய கடாவாக மாறியது.

 

ஒரு நாள் காலேஜுக்கு போய் வந்த ரீனா பேக்கை தூக்கி வீசிவிட்டு கடாவை கையில் பிடித்துக்கொண்டு வயல்வெளிக்குச் சென்றாள். அங்கு நிறைய ஆடுகள் இருந்ததினால் இவள் கையில் பிடித்திருந்த கயிறை உதறிவிட்டு ஆடு ஓடியது. இவளோ பொத்தென்று கீழே விழுந்தாள். இது அந்த ஆட்டுக் கூட்டத்திற்குள் சென்றதும் அங்குள்ள மேய்ப்பன் ஆட்டுக்கடாவை விரட்டிவிட்டான். ஆடு வீட்டிற்கு போய்விட்டது. ரீனாவையோ காணவில்லை. வயல்வெளிக்குப் போய்ப் பார்த்தால் கை ஒடிந்து எழுந்திருக்க முடியாமல் கிடந்தாள். அவளைத் தூக்கிக் கொண்டு போய் கையில் கட்டுப்போட்டு வீட்டில் கொண்டு வந்து விட்டார்கள் அவள் பெற்றோர். வலியோடு கட்டிலில் படுத்துக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தாள். இந்த ஆடு வரும் முன் இயேசப்பா கூட நான் எவ்வளவு நெருங்கி ஜீவித்தேன். எவ்வளவு நன்றாகப் படித்தேன். இப்பொழுது இந்த ஆடு என்னையும் இயேசப்பாவையும் பிரித்து விட்டதே. ஒருவேளை என் கை ஒடிந்து போகாவிட்டால் இன்னும் இயேசப்பாவை விட்டு வெகுதூரம் சென்றிருப்பேன். இயேசப்பா என்னை நேசித்ததாலே எனக்கு நல்ல பாடம் கற்பித்து தந்திருக்காங்க. இனிமே இயேசப்பாவை விட யாரையும் அதிகம் நேசிக்க மாட்டேன் என்று இருதயத்தில் தீர்மானம் பண்ணினாள். 

 

தம்பி, தங்கச்சி! நீயும் இந்த ரீனாவைப் போல் இயேசப்பாவை விட்டு தூரம் போயிருக்கிறாயா? இது இயேசப்பாவுக்குப் பிடிக்காது. ஏன்னா இயேசப்பா உங்களை ரொம்ப நேசிக்கிறாங்க. எனவே இந்த ரீனாவைப் போல் மறுபடியும் இயேசப்பாகிட்ட ஓடிவந்திரு, இல்லைனா அடிதான் விழுகும். ஓகேவா..

- S. சாராள் சுபாஷ்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al