Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 25-02.2023
Share:

By Village Missionary Movement

Saturday, 25-Feb-2023

இன்றைய தியானம்(Tamil) 25-02.2023

 

பொய்யினால் வரும் தண்டனை

 

“…நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய் சொன்னாய் என்றான்” - அப். 5:4

 

வட மாநிலத்தில் ஒரு மிஷனெரி ஊழியம் செய்து வந்தார். அவர் எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்து வந்தார். இதை அறிந்த சிலர் இவரிடத்தில் பொய் சொல்லி பணம் வாங்க நினைத்தார்கள். அந்த மிஷனெரி வரும் வழியில் ஒருவனை செத்தது போல் நடிக்கச் சொன்னார்கள். அந்த மிஷனெரியிடம் இவன் அனாதை; இவனை அடக்கம் பண்ணப் பணம் இல்லை என்று சொன்னார்கள். அவர் பணம் கொடுத்து, “ஆண்டவரே, இவன் ஆத்துமா சாந்தி அடையட்டும்” என்று ஜெபித்து சென்றார். “சரி இவனை அடக்கம் பண்ணி விடுங்கள்” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அவர் போனவுடன் செத்தவன் போல் நடித்தவனை எழுப்பினார்கள். அவன் எழும்பவில்லை; அவன் மரித்துப் போயிருந்தான். அந்த மிஷனெரி ஜெபித்தது போலவே அவன் ஆத்துமா சாந்தி அடைந்து விட்டது. உண்மையான தேவ மனிதனிடம் சொன்ன பொய்யினால் வந்த தண்டனையைப் பார்த்தீர்களா?

 

இது போலத்தான் வேதத்தில் அனனியா - சப்பீராளின் சம்பவம்! அனனியா நிலத்தை விற்று, அதில் ஒரு பங்கை அவர்களுக்கு எடுத்து வைத்துக் கொண்டு மற்றதைக் கொண்டு வந்து அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்தான். பேதுரு அனனியாவை நோக்கி, “நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றாய்?” என்று கேட்டு “ஏன் பொய் சொன்னாய்? நீ இப்படிப்பட்ட எண்ணம் கொண்டதென்ன? மனுஷரிடத்தில் அல்ல தேவனிடத்தில் பொய் சொன்னாய்” என்றான் பேதுரு. அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்டு விழுந்து ஜீவனை விட்டான். அவன் மனைவி, ”சப்பீராளும் இவ்வளவுக்குத்தான் நிலத்தை விற்றீர்களா?” என்று கேட்டதற்கு அவளும், ”ஆம்” என்றாள். பேதுரு அவளை நோக்கி, “பொய் சொல்ல ஒரு மனப்பட்டதென்ன?” என்றான். அந்த வார்த்தையைக் கேட்டு அவளும் விழுந்து ஜீவனை விட்டாள்.

 

தேவன் நம்மை அழிக்க அல்ல, ஆசீர்வதிக்கவே விரும்புகிறார். ஆனால் நாம் தேவனுடைய மனிதர்களிடம் துணிகரமாய்ப் பொய் சொல்வது, தேவனுக்கு விரோதமாய் பொய் சொல்வதற்கு சமம். நாம் தேவனிடத்திலும் மனிதரிடத்திலும் உண்மையைப் பேசுவோம். நமக்கு வரும் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வோம். தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

- Bro. ரூபன் கிறிஸ்டி

 

ஜெபக்குறிப்பு:

நம் பணித்தளங்களுக்கு புதிதாக இருசக்கர வாகனங்கள் அவசரமாக தேவைப்படுகிறது. உதவும் உள்ளங்கள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet