By Village Missionary Movement
Wednesday, 22-Feb-2023இன்றைய தியானம்(Tamil) 22-02.2023
ஞானஸ்நானம் வேண்டாம்
“…ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிரு(க்கிறது)…” - 1 பேதுரு 3:21
இன்றைய நாளிலே, நாம் ஞானஸ்நானம் எடுப்பதற்கு எவையெல்லாம் காரணங்களாக இருக்கக்கூடாது எனப் பட்டியலிட்டு சிந்திப்போம்.
1. ஒரு கிறிஸ்தவப் பெண்ணையோ, ஆணையோ திருமணம் செய்ய வேண்டுமென்பதற்காக யாதொருவரும் ஞானஸ்நானம் எடுக்காதிருக்கக்கடவர்.
2. தன்னுடைய போதகரையோ, பெற்றோரையோ, அல்லது நண்பர்களையோ பிரியப்படுத்த வேண்டுமென்பதற்காக யாரும் ஞானஸ்நானம் எடுக்கக்கூடாது.
3. குடும்பத்தில் மற்றவர்கள் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள் என்பதற்காக எந்த ஒரு நபரும் ஞானஸ்நானம் எடுக்கக் கூடாது.
4. ஞானஸ்நானம் என்பது பரலோகத்திற்கு கொண்டு செல்லும் ஒரு டிக்கட் என்று நினைத்து யாரும் ஞானஸ்நானம் எடுக்கக் கூடாது.
5. தேவன் நம்முடைய ஒரு ஜெப விண்ணப்பத்திற்கு பதில் தர வேண்டும் என்பதற்காக நாம் ஞானஸ்நானம் எடுக்கக் கூடாது.
6. ஏற்ற முதிர்ச்சியான வயது வந்துவிட்டது என்பதற்காக யாரும் ஞானஸ்நானம் எடுக்கக் கூடாது
7. ஞானஸ்நானம் எடுப்பது பாராட்டத்தக்க செயல் என்பதால் ஞானஸ்நானம் எடுக்கக் கூடாது
8. ஒரு சபைக்கோ அல்லது ஒரு போதகருக்கோ ஏதோ ஒரு வகையில் கடன் பட்டதினால் யாரும் ஞானஸ்நானம் எடுக்கக் கூடாது
9. சபையாரது பண உதவியையோ அல்லது பொருள் உதவியையோ எதிர்பார்த்து எவரும் ஞானஸ்நானம் எடுக்கக் கூடாது.
10. ஜெபத்தில் அற்புத சுகம் கிடைத்து விட்டது என்பதற்காக ஒரு நபரும் ஞானஸ்நானம் எடுக்கக்கூடாது
11. ஒரு சொப்பனத்தை பார்த்ததினால் ஞானஸ்நானம் எடுக்கக் கூடாது.
12. ஒரு வியாதி சுகமாக வேண்டுமென்பதற்காக ஞானஸ்நானம் எடுக்கக் கூடாது.
13. மனந்திரும்புவதற்கு முன்பாக ஞானஸ்நானம் எடுக்கக் கூடாது.
14. இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் முன்பு ஞானஸ்நானம் எடுக்கக் கூடாது
15. ஞானஸ்நானத்தைக் குறித்த தெளிவான அர்த்தத்தை புரியாமல் ஒருவரும் ஞானஸ்நானம் எடுக்கக் கூடாது
பின்பு யார் ஞானஸ்நானம் எடுப்பது? மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறுங்கள். (அப் 2:38) தேவனுடைய வார்த்தையை சந்தோஷமாய் ஏற்றுக் கொண்டு ஞானஸ்நானம் பெறுங்கள். (அப் 2:41) அதுவே தேவனோடு நம்மை உண்மையாய் தொடர்புபடுத்தும்.
- J.F ரோலண்ட்ஸ்
ஜெபக்குறிப்பு:
YouTube மற்றும் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் நபர்கள் ஊழியத்திற்கு ஜெபிக்கும், தாங்கும் பங்காளர்களாய் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864