Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 21-02.2023
Share:

By Village Missionary Movement

Tuesday, 21-Feb-2023

இன்றைய தியானம்(Tamil) 21-02.2023

 

பொன் தேவர்கள்

 

"என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்." - யாத்திராகமம் 20:3

 

கர்த்தர் எகிப்தியரை வாதைகளால் வாதித்த போது, அவர்கள் இஸ்ரவேலரை எகிப்தை விட்டுத் துரத்தி விட எண்ணினார்கள். ஆனால் கர்த்தரோ இஸ்ரவேலருக்கு வரவேண்டிய நானூறு வருட சம்பளத்தைக் கொடுத்து அவர்களை வெளிக்கொண்டு வர விரும்பினார். எனவே மோசே சொல்லி இருந்தபடி இஸ்ரவேலர் எகிப்தியரிடத்தில் வெள்ளி,பொன் உடைமைகளையும், வஸ்திரங்களையும் கேட்டு வாங்கி அவர்களைக் கொள்ளையடித்தார்கள். ஆனால் வெகு விரைவிலேயே தங்களிடமிருந்த பொன்னினால் ஒரு பொற்கன்றுக் குட்டியை உண்டாக்கி வணங்கி, விக்கிரக ஆராதனைக்கு உட்பட்டார்கள்.

 

கிறிஸ்தவர்களாகிய நாம் நம் உடைமைகளைப் பயன்படுத்துவதில் எவ்வளவாய்க் கவனம் செலுத்த வேண்டுமென்று இச்சம்பவம் நமக்கு எச்சரிக்கிறது. தேவப் பிள்ளைகள் பொன், வெள்ளி, பணம் போன்றவற்றை அனுபவிக்கலாம்; ஆனால் அவற்றைத் தகாதவிதமாக ஞானமற்று உபயோகித்தால் அது பாவம். எப்போது அவை பாவமாகிறது? ஒன்று, நாம் நம்மிடம் இருக்கும் உடைமைகளால் பெருமையடையும்போது! இரண்டாவதாக, நாம் தேவனையே முழுமையாக சார்ந்திருப்பதை விட்டு விட்டு நமக்கிருக்கும் நகைகள், சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் இவற்றின் மீது நம்மையும் அறியாமல் நம்பிக்கை வைக்கும் போது! நாம் இந்த உலகில் அந்நியரும் பரதேசிகளுமாய் இருப்பதால் எகிப்தின் பொக்கிஷங்கள் (உலக ஆஸ்திகள் ) மீது மனதை வைத்து, பரம அழைப்பை மறந்து விடக் கூடாது. (எபி.11: 13,26)

 

பிரியமானவர்களே! நம் உலக ஆஸ்திகளைக் கர்த்தருக்காகப் பயன்படுத்துகிறோமா அல்லது அவற்றிற்கு அடிமையாகி விட்டோமா? என சிந்திப்போம். “மகனே! மகளே! உன்னுடைய அழைப்பு உன்னதமானது” என்று பரிசுத்த ஆவியானவர் மெல்லிய குரலில் நம்மோடு பேசிக் கொண்டிருக்கிறார். உலக ஆஸ்திகள் நமக்கு நல்ல உதவியாக இருந்தாலும், அவை கொடுமையான எஜமானர்களாக நம்மை அடிமைகளாக்க ஒருபோதும் இடம்கொடுத்துவிடாதபடி  

ஜாக்கிரதையாயிருப்போம்.

- Mrs. கீதா ரிச்சர்ட்

 

ஜெபக்குறிப்பு:

நம் பணித்தள ஊழியர்கள் தினமும் காலை 100 கைப்பிரதிகள் கொடுத்து வருகின்றனர். கைப்பிரதியை பெற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet