By Village Missionary Movement
Thursday, 16-Feb-2023இன்றைய தியானம்(Tamil) 16-02.2023
எது அவருடைய சித்தம்?
"நாம் எதையாலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவி கொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்” - 1யோவான் 5:14
இன்றைய காலகட்டத்தில் யாரும் யாரையும் சார்ந்து வாழக் கூடாது என்ற மனநிலையில் இருக்கின்றனர். காரணம், சார்ந்து வாழும் வாழ்க்கை அநேகருக்கு சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்காலத்தில் பிள்ளைகள் பெற்றோர் விருப்பத்திற்கு ஏற்ப கீழ்ப்படிந்து வாழ்ந்தனர். ஆனால் இன்றைய சூழலில் பெற்றோரின் விருப்பங்கள் வாலிபப் பிள்ளைகளுக்கு வெறுப்பாகவே உள்ளது. பெற்றோரின் ஆலோசனைகளுக்கே செவிகொடுக்க முடியாமல் தடுமாறுகின்றனர் நம் இளைய தலைமுறையினர். இதில் ஆண்டவர் சித்தத்திற்கு எப்படி செவி கொடுப்பார்கள்? சிந்திக்க வேண்டிய விஷயம்தான் இது! நாம் ஆண்டவரை எந்த இடத்தில் வைத்துள்ளோம்? உங்கள் சொந்த ஆசைகளுக்காக உங்களுக்கு வேண்டிய ஒன்றை முதலிடத்தில் வைத்துள்ளீர்களா? அப்படி வைத்திருப்பீர்களானால் உங்களைப் போன்ற ஒரு ஒரு unlucky யாருமே இல்லை. ஆண்டவருக்கு முதலிடம் கொடுத்து, அதன்பின் மற்ற காரியங்களை வரிசைப்படுத்தும்போது நாம் கேட்காத ஆசீர்வாதத்தையும் தேவன் நமக்குக் கொடுக்க வல்லவர்.
பரிசுத்த வேதாகமத்தில் கூட ஆண்டவரின் சித்தத்தின் படி செய்து வாழ்ந்து காட்டிய நபர்கள் உண்டு. அவர்களில் சாலொமோன் என்பவரைப் பற்றிய சில காரியங்களை உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். இஸ்ரவேலை ஆட்சி செய்த மூன்றாவது ராஜா இவர்தான். ஏழு வருடத்தில் தேவனுடைய ஆலயத்தை நேர்த்தியாக கட்டியவர். பிரசங்கி, உன்னதப் பாட்டு, நீதிமொழிகள் போன்ற புத்தகங்களை எழுதிய எழுத்தாளர். நாற்பது வருஷம் இஸ்ரவேலை சமாதானத்தோடே அரசாட்சி செய்தவர். பல வகையான திறமைகளையும், பன்முகங்களையும் கொண்ட சாலொமோன் தனக்கு விருப்பமான ஜெபத்தை ஏறெடுக்காமல் ஆண்டவருக்குப் பிரியமான ஜெபத்தை ஏறெடுத்தார். அவர் selfish ஆக இருக்கவில்லை. 1 கொரிந்தியர் 10: 24 -ல் சொல்லப்பட்டிருப்பதைப் போல கர்த்தருடைய ராஜ்யத்திற்கென்று ஜனங்களைச் சேர்க்க தன்னுடைய பிரயோஜனத்தை focus பண்ணாமல் பிறருடைய பிரயோஜனத்தை focus பண்ணினார் சாலொமோன். இவருடைய இருதயத்தைப் பார்த்த ஆண்டவர் இவர் கேட்ட ஞானத்தை கொடுத்ததுமல்லாமல் கேட்காத ஐசுவரியத்தையும் கொடுத்தார்.
இதை வாசித்துக் கொண்டிருக்கிற அன்பு சகோதர சகோதரி, உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கான காரியங்களுக்காக ஆண்டவரிடம் போராடிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்காகவே பரிந்து பேசிக் கொண்டிருக்கிறீர்களா? அப்போ மாற வேண்டியது கண்டிப்பாக உங்கள் ஜெபம் தான். அவர் சித்தப்படி நீங்கள் ஜெபிப்பீர்களானால், அவர் உங்களுக்கு செவி கொடுப்பார். தேவ சித்தத்தின்படி உங்கள் வாழ்க்கை அமையும் என்பதில் சந்தேகமில்லை.
- Sis. ஹேமலதா
ஜெபக்குறிப்பு:
மே 1 அன்று திருச்சியில் நடைபெறும் எழுப்புதல் வாலிபர் முகாமின் ஆயத்த வேலைகளில் தேவகரம் உடனிருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864