Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 14-02.2023
Share:

By Village Missionary Movement

Tuesday, 14-Feb-2023

இன்றைய தியானம்(Tamil) 14-02.2023

 

காதல் காதல் காதல்!

 

"...நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்து கொள்ளுங்கள்" - எபேசியர் 5:17

 

வாலிபப் பருவத்தில் ஒருவர் உங்களை காதலிக்கிறேன் என்ற போது என்ன நடக்கிறது? தூங்கிக் கிடக்கும் உங்கள் உணர்வுகள் தீப்பற்றி எரிகின்றன. அவர்/ அவள் தன் காதலை வெளிப்படுத்தினவுடன் அவர்கள் பக்கமாய் ஈர்க்கப்படுகின்றீர்கள். அனேகர் இச்சூழ்நிலையைச் சமாளிக்கத் தெரியாமல் திணறுகின்றனர். இப்படித்தான் திணறி நின்றால் தங்கை கீதா! அப்போதுதான் வாலிபர் முகாமில் ஐயர் அம்மா பேசினார்கள்.

 

1. உங்கள் வயதைக் குறித்து சிந்தியுங்கள்: திருமண வயதை எட்டும் முன் யாரை மணப்பதென்றோ உங்கள் எதிர்காலத்தைக் குறித்தோ உங்களால் தீர்மானிக்க முடியாது. அந்த நபரை சட்டை செய்யாதீர்கள். அதுவும் Teen Ageல் இருந்தால் கட்டாயம் காதலிக்காதீர்கள். அது இனக்கவர்ச்சியே அன்று வேறொன்றுமில்லை.

 

2. தேவன் பிரியப்படுவாரா என சிந்தியுங்கள்: இக்காரியத்தில் தேவன் பிரியப்படுவாரா? என சிந்தியுங்கள். அவிசுவாசியாயிருந்தால் தேவனோ, வேதமோ சொல்கிறது No என்பதை லேசர் எழுத்துக்களில் உங்கள் உள்ளத்தில் எழுதிக்கொள்ளுங்கள்.

 

3. உங்கள் கல்வியை குறித்து சிந்தியுங்கள்: திருமண வயதைக் கடந்து உங்கள் அடிப்படை கல்வித் தேவையை முடித்திருந்தால் பெற்றோரிடம் 

சொல்லி யோசிக்க சொல்லுங்கள். சரியான தேர்வு என்றால் அவர்களை திருமணம் செய்து வைப்பார்கள். திருமண வயது இல்லை என்றால் அப்படியே விட்டுவிடுங்கள். கல்வி உன் வாழ்வில் முக்கியம்..

 

4. உங்கள் உணர்வுகளைக் குறித்து சிந்தியுங்கள்: கவர்ச்சியிலோ, பாவப்பட்டோ அல்லது பிறர் தரும் அழுத்தத்தினாலோ இங்கு சம்மதித்தேனா என யோசியுங்கள். அந்த நபரை விரும்பினாலும் சற்று பொறுத்திருங்கள். அவர்களின் உண்மைத் தன்மை சீக்கிரத்தில் தெரிய வரும்.

 

5. உங்கள் பெற்றோரை குறித்து சிந்தியுங்கள்: இந்த நபரை நீங்கள் திருமணம் செய்ய உங்கள் பெற்றோர் விரும்புவார்களா? என சிந்தியுங்கள்.

 

6. திருமணம் முடித்து காதலியுங்கள்: திருமணத்திற்குப் பிறகு தேவன் உங்களுக்குத் தந்த வாழ்க்கைத் துணையை முழு மனதுடன் காதலியுங்கள். இதைத் தான் ஈசாக்கு செய்தார். ரெபெக்காளை தனக்கு மனைவியாக்கிக் கொண்டு அவளை நேசித்தான் ( ஆதி 24:67) என்றார்கள் ஐயர் அம்மா. கீதாவும் தெளிவு பெற்றாள்.

- S பேர்லின் செல்லபாய்

 

ஜெபக்குறிப்பு : 

ஆந்திரா மற்றும் ஒடிசாவில் நடைபெறும் Day Care Centre திட்டத்தின் மூலம் சந்திக்கப்படும் சிறுவர்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al