Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 12-02.2023
Share:

By Village Missionary Movement

Sunday, 12-Feb-2023

இன்றைய தியானம்(Tamil) 12-02.2023

 

கீழ்ப்படி

 

"என் மகனே, என் ஞானத்தைக் கவனித்து, என் புத்திக்கு உன் செவியைச் சாய்” - நீதிமொழிகள் 5:1

 

ஹலோ! குட்டி செல்லங்களே எப்படி இருக்கீங்க. சந்தோஷமா இருக்கீங்களா? வெரி குட், நீங்க happy-யா இருக்கக் காரணம் உங்க அப்பா அம்மா தானே. உங்க பெற்றோர் இயேசப்பா உங்களுக்குக் கொடுத்த கிப்ட் தானே. அவங்க சொல்ற பேச்சை கேட்டு நடந்துக்கணும். அப்பத்தான் இயேசப்பா சந்தோஷப்படுவாங்க. ஓகே கதை கேட்க ரெடியா இருக்கீங்களா? சூப்பர்..

 

தோட்டம், துரவு, வயல்வெளி, இதற்கெல்லாம் சொந்தக்காரரான ஒரு அப்பா இருந்தாங்க. இவர் கடின உழைப்பாளி காலையிலிருந்து மாலை வரை தோட்டத்தில் தான் இருப்பார். இவருக்கு இரண்டு மகன்கள் உண்டு. இவர்களுக்கு தோட்டத்தைப் பராமரிக்க, வேலையாட்களை கவனிக்க அப்பா சொல்லிக் கொடுத்தார். ஒரு நாள் அப்பாவுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனது. அப்பொழுது மூத்த அண்ணனை அழைத்து, "தோட்டத்திற்கு சென்று இன்றைய வேலைகளையெல்லாம் கவனிப்பா" ன்னு சொன்னாங்க. "இல்லப்பா என்னால் போக முடியாது. எனக்கு வெளியே நிறைய வேலை இருக்குப்பா"ன்னு சொல்லிட்டாங்க. சரின்னு இளைய அண்ணன் இருக்காங்கல அவர்களை அழைத்து தோட்டத்திற்கு போகச் சொன்னாங்க." ஓகே அப்பா நான் போய் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு வருகிறேன்" என்று சொல்லி விட்டு friends கூட சேர்ந்து விளையாடப் போயிட்டாங்க. பாத்தீங்களா குட்டீஸ் அப்பாவ ஏமாத்திட்டாங்கல்ல. நீங்க இப்படி ஏமாத்த மாட்டீங்கதானே! மூத்த அண்ணன் பைக் ஓட்டிக்கொண்டிருக்கும் போது இயேசப்பா அவங்க உள்ளத்தில் பேசினாங்க. "வயதான தகப்பனார் உடம்பு சரியில்லாததால் தானே உன்னைப் போகச் சொன்னார். நீ கீழ்ப்படியாமல் இருக்கலாமா?" என்றதும் பைக்கை நிறுத்திவிட்டு யோசித்தார். ஒரு யூ டர்ன் போட்டு தோட்டத்திற்கு சென்று அப்பா சொன்ன வேலைகளையெல்லாம் முடித்து வேலைக்காரருக்கு சம்பளம் கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தாங்க. "அப்பா நீங்க சொன்ன வேலையை முடித்து விட்டேன்," என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது இளைய அண்ணன் வந்தாங்க. “சாரிப்பா நீங்க சொன்ன வேலையை செய்யாமல் உங்களை ஏமாத்திட்டேன்" என்று சொன்னதும், அப்பா மன்னித்துவிட்டார். ஆனால் மனசுல கவலையா இருந்துச்சு. ஆனால் மூத்த அண்ணன் போக மாட்டேன்னு சொன்னாலும் ஜீசஸ் பேசினதும் கீழ்ப்படிந்தாங்க. இதனால அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.

 

குட்டிச் செல்லங்களே! நீங்களும் மூத்த அண்ணனைப் போல உங்க பெற்றோரை சந்தோஷப்படுத்துவீங்களா? ஆமா உங்க, டீச்சர், பெற்றோர், பெரியவர்கள் மூலமாக நல்ல காரியங்களை ஜீசஸ் உங்களுக்கு சொல்லித் தருவாங்க. நீங்க, கீழ்ப்படியும் போது, ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருப்பீங்க. God Bless You. 

- Sis. தெபொராள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet