By Village Missionary Movement
Thursday, 09-Feb-2023இன்றைய தியானம்(Tamil) 10-02.2023
தாமதிக்காதே
"ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து... தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப் போனான்” - ஆதி. 22:3
சீன தேசத்தில் உள்ள சிறுவன் ஒருவன் பக்தியுள்ள தன் தாய் கொடுக்கும் சில காசுகளை கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து வைத்திருந்தான். என்றாவது தனக்குப் பிடித்தமான ஒன்றை வாங்க வேண்டுமென்று காசை சேகரித்தான். ஒரு நாள் காலையில் உண்டியலுடன் தன் அம்மாவிடம் ஓடி வந்தான். வேகமாக அதில் உள்ள காசுகளை எல்லாம் அம்மாவின் மடியில் கொட்டி விட்டு சொன்னான், “அம்மா, நான் நேற்று இரவு ஒரு சொப்பனம் கண்டேன். அதில் நம் நாட்டில் உள்ள மஞ்சூரியா மாநிலத்தில் உள்ள கொலைகாரர்கள் மத்தியில் ஊழியம் செய்யும் மிஷனெரி கோஃபோர்த்து அவர்களுடன் சேர்ந்து நானும் நிற்பதாகக் கண்டேன். எழுந்தவுடன் என் உள்ளத்தில் ஒரு மெல்லிய சத்தம் "உன் உண்டியலில் உள்ள பணத்தை மிஷனெரி கோஃபோர்த்துக்கு அனுப்பு" என கூறியதைக் கேட்டேன். ஆகவே நீங்கள் இந்த பணத்தை அவருக்கு அனுப்பி இயேசுவைப் பற்றி அங்குள்ளோருக்கு அறிவித்து ஊழியம் செய்யும்படி தெரிவியுங்கள்” என்று கூறி பள்ளிக்கு கிளம்பச் சென்றான்.
கொஞ்ச நேரம் சென்றபின் திரும்ப ஓடி வந்து, “அம்மா லேட் பண்ணாம உடனடியாக அனுப்பி விடுங்கள். ஆண்டவர் என்னிடம் இரண்டாம் முறையாக சொல்லுவதை நான் கேட்க விரும்பவில்லை" என்று கூறினான். இப்படிப்பட்ட குழந்தை உள்ளமே இன்று நமக்கு தேவையாயிருக்கிறது. ஆண்டவர் சொன்னவுடன் கீழ்ப்படியும் விசுவாசம்! ஆம், ஆபிரகாம் தேவனுடைய வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிந்தார். மனைவியாகிய சாராளிடம் இதைப் பகிர்ந்து கொண்டால் கூட தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதில் தாமதமோ, தடையோ ஏற்படலாம் என எண்ணியிருக்கலாம். ஆகவேதான் சாராளுக்கு அறிவிக்காமல் அதிகாலையில் எழுந்து ஈசாக்கை பலியிடும்படி ஆண்டவர் சொன்ன வார்த்தைக்குக் கீழ்ப்படிய தீவிரப்பட்டார். முடிவை நாம் அறிவோம். ஈசாக்கிற்கு பதிலாக ஆட்டுக்குட்டி பலியான அற்புதம் நிகழ்ந்தது.
அன்பானவர்களே! தாமதமான கீழ்ப்படிதலும் கீழ்ப்படியாமைக்குச் சமமே! பொதுவாக நம் மனதிற்கு பிடித்த காரியத்தை செய்யும்படி கட்டளை பெற்றால் உடனே கீழ்ப்படிவது சுலபம். ஆனால் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத, செய்ய விரும்பாத காரியத்திற்கு கீழ்ப்படிவது கடினமே! ஆனால் ஆபிரகாம் அதற்கும் கீழ்ப்படிந்தார். நாமும் முதலாவது தேவனுக்குக் கீழ்ப்படிவோம். தேவனுக்குக் கீழ்ப்படிந்தால் கணவருக்கும், தலைமைத்துவத்திற்கும் கீழ்ப்படிவது எளிதாக மாறிவிடும். நாம் செய்யும் படி கட்டளை பெற்ற காரியத்தில் இன்னுமொரு முறை செய்யும்படி அறிவுறுத்தப்படுமுன் உடனே கீழ்ப்படிய கற்றுக்கொண்டு ஆசீர்வாதத்தைப் பெறுவோம்.
- Mrs. எபன் சந்தோஷ்
ஜெபக்குறிப்பு:
எல்லா பணித்தளங்களிலும் 30 நாட்களும் 30 வீடுகளில் ஜெபக்குழுக்கள் நடைபெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864